அடுத்த தீபாவளி எப்ப வரும்…?!
“டேய் ராமு வேன் வந்துடப்போதுடா சீக்கிரம் கிளம்பு:”, என்று தனது 13வயது மகனை படுக்கையிலிருந்து கிளப்பினாள் சந்திரா. சந்திராவின் கணவன் ஒரு விபத்தில் மரணமடைந்திருந்தான். நேற்று விடுமுறையானதால் சோம்பலக படுக்கையிலிருந்து எழுந்த ராமு அவசர அவசரமாக காலைக்கடன்களை முடிந்து சட்டை, கால்சட்டையை அணிந்து கொண்டிருந்தான். ஒரு தட்டு நிறைய சாதத்தையும் கோழி குழம்பை ஒரு கிண்ணத்திலும் வைத்து காலை உணவை தந்தாள் சந்திரா. சாப்பிட்டுக்கொண்டே வெளியில் எட்டிப்பார்த்தான் ராமு அவனுடைய 1ம் வகுப்பிலிருந்து படித்த சங்கர் சைக்கிளில் பள்ளிக்கு வேக வேகமாக சென்று கொண்டிருந்தான். தூரத்தில் பள்ளிகூடத்தில் முதல் பெல் கேட்டது, அம்மா மத்திய சாப்பாட்டை ஒரு டப்பாவில் அடைத்து தந்ததை எடுத்து அதை அவன் பையில் போட்டுக்கொண்டு வேன் வந்துடப்போது நான் கிளம்புறேன் என்று சொல்லி சாலைக்கு வந்தான் ராமு.
சாலை நிறைய நேற்றைய தீபாவளிக்கு வெடித்த வெடிகளின் காகிதங்கள் ரோட்டில் இரைந்து கிடந்தன. காற்றில் கந்தக வாசனை மூக்கை துளைத்தது. நாக்கில் கோழிக்குழம்பின் சுவை இன்னும மறையவில்லை. தீபாவளிக்கு மட்டும் தான் அம்மா கோழி குழம்பு வைப்பாள். வேன் வந்தது ஏறி அமர்ந்தான் ராமு. அவனை அடைத்துக் கொண்டு வேன் புறப்பட்டது. சன்னல் ஓரம் உக்கார்ந்தான். அவனுக்கு முன்னால் கிளம்பிய சைக்கிளில் கிளம்பிய சங்கரை கடந்து சென்றது வேன்.
வேன் பின்னால் ஒரு பலகை “பிரபல பட்டாசு தொழிற்சாலைக்கு ஆட்கள் தேவை”
– V.ரெத்தினசாமி –
நான் எழுதிய ஒரு பக்க கதை நன்றாக இருந்தால் Share செய்யவும். நன்றி
Social