Cure Headaches with Cinnamon
தலைவலியை போக்கும் லவங்கப்பட்டை
தலைவலி வந்துவிட்டால் போதும், உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. தலைவலிக்கு வலி நிவாரணியாக இருக்கும் “பெய்ன்கில்லர்’ எல்லாம், உடலுக்கு கேடானது. 40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், “மைக்ரேன்’ என்று சொல்லப்படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும்.
பிடிக்காத வாசனை, தூசி, ஓயாத ஒலி போன்ற பல விஷயங்கள் தலைவலிக்கு காரணமாக அமைகின்றன. இயற்கையே நமக்கு தந்த கொடை காட்டு லவங்கப்பட்டை எனும் பெரிய லவங்கப்பட்டை. சைனஸ் தலைவலி மற்றும் ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய தலைவலி என அனைத்து தலைவலிகளுக்கும் அற்புதமான மூலிகை மருந்து காட்டு லவங்கப்பட்டை. சின்னமோமம் மலபாட்ரம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட லாரேசியே (Lauraceae) குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பட்டைகளே லவங்கப்பட்டை ஆகும். இவை உணவிற்கும், மருந்திற்கும் பெருமளவு பயன்படுகின்றன.
இந்த பட்டைகளிலுள்ள சின்னமால்டிகைடு, யூஜினால் போன்ற ஆவியாகக்கூடிய எண்ணெய் வகைகள் சதை வளர்ச்சியை கட்டுப்படுத்தி, ஒவ்வாமையை நீக்கி, சுவாசத்தை சீர் செய்கின்றன. இவற்றிலுள்ள டைடெர்பின்கள் ஆன்டிஹிஸ்டமைன்களாக செயல்பட்டு, அலர்ஜியை தடுக்கின்றன. காட்டு லவங்கப்பட்டை, தாளிசப்பத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சீரகம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, சுத்தம் செய்து, இடித்து, பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் அளவு தேன் அல்லது பாலுடன் கலந்து தினமும் 2 முறை சாப்பிட்டு வரலாம். அரை கிராம் காட்டு லவங்கப்பட்டையை பொடித்து, சலித்து தேனுடன் குழப்பி, தினமும் ஒரு வேளை உணவுக்கு பின் சாப்பிட கபம் நன்கு வெளியேறும். மூக்கடைப்பும் தலைவலியும் நீங்கும்.
Social