Kolukkumalai Tea Estate – கொலுக்குமலை
கொலுக்குமலை! நீங்கள் அறிந்திராத சொர்க்கம்
உலகத்திலேயே டீ உற்பத்தியாகும் மிக உயரமான இடம் தான் இந்த கொலுக்குமலை. கடல் மட்டத்தில் இருந்து 7500 அடி உயரத்தில் இருக்கும் இந்த இடம் மூணாறில் இருந்து 30 கி.மீ தொலைவில் இன்னும் அதிகமானோர் கேள்விப்பட்டிராத சுற்றுலாதலமாகவே இருந்து வருகிறது. மூணாறைப் போன்றே அற்புதமான இயற்க்கை காட்சிகளை இங்கு பார்த்து ரசிக்கலாம். வாருங்கள் இங்கே என்னனென்ன இடங்கள் இருக்கின்றன, எங்கு தங்கலாம், எப்படி அடைவது என்பதை தெரிந்து கொள்வோம்.
கொலுக்குமலை:
தேனி மாவட்டத்தில் கேரளா, தமிழ்நாடு மாநில எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது இந்த கொலுக்குமலை. மூணாறு வந்து அங்கிருந்து கிழக்கே 23 கி.மீ தொலைவில் உள்ள சூரிய நெல்லி என்கிற இடத்தை அடைய வேண்டும். அதற்குமேல் காரில் பயணம் செல்வது மிகக்கடினம் என்பதால் இங்குவரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தனியார் ஜீப் ஒன்றை வாடகைக்கு அமர்திக்கொள்கின்றனர். சூரிய நெல்லயில் இருந்து கொலுக்குமலை 10 கி.மீ தான் என்றாலும் இதனை சென்றடைய இரண்டு மணி நேரம் ஆகிறது. சுவாசப்பிரச்சனை இருப்பவர்கள், குழந்தைகள் இப்பயணத்தை தவிர்ப்பது நல்லது.
மேலே செல்லச்செல்ல இயற்கையின் வர்ணஜாலம் ஆரம்பிக்கிறது. அற்புதமான இயற்கை காட்சிகள் நம் கண்களுக்கு விருந்து படைகின்றன.
கொலுக்குமலைப்பதை தனியாருக்கு சொந்தமானது என்பதால் நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் செலுத்தவேண்டும். இங்கு தங்கவேண்டுமானால் கொலுக்குமலை தேயிலை உற்பத்தி ஆலையால் நடத்தப்படும் 3 படுக்கையறை வசதி கொண்ட தாங்கும் விடுதி ஒன்று மட்டுமே உள்ளது. முன்னரே திட்டமிட்டு முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது.
சூரிய உதயம் தான் கொலுக்குமலையின் சிறப்பம்சம் ஆகும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அக்காட்சியை நிச்சயம் தவற விடக்கூடாது.
தனியாக கேம்ப் அமைந்து தங்கினால் அது இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இங்கிருக்கும் தேயிலை உற்பத்தி ஆலையில் வெறும் பத்து ரூபாய்க்கு அதிருசியான தேநீர் கிடைக்கிறது.
தவிர ஆலையில் இருக்கும் ஆங்கிலேயர் காலத்திய தேநீர் உற்பத்தி முறை குறித்தும் நாம் அறிந்து கொள்ளலாம். அடுத்தமுறை மூணாறு செல்கையில் அப்படியே கொலுக்குமலைக்கும் சென்றுவாருங்கள். ஆரவாரம் நிறைந்த உலகில் இருந்து தப்பித்து அமைதியாக இயற்கையுடன் நாளைக் கழிக்க சிறந்த இடம் இந்த கொலுக்குமலை.
அறைகள் முன்பதிவுக்கு :
http://www.kolukkumalai.in/
Social