Best Smartphones Under Rs 10,000

ரூ 10,000 குள் சிறந்த ஸ்மார்ட் போன்கள் (ஜனவரி, 2015)

best-smartphones-under-10k-jan15

என்ன பொங்கல் போனஸ் வந்துட்டா?! பழைய போன்னை மாத்திட்டு புதுசா வாங்கிடலாம்ன்னு கிளம்பிட்டீங்களா அப்ப இந்த கட்டுரைய படிங்க உங்களுக்கு உதவியா இருக்கும்.

 

ஸ்யோமி ரெட்மி 1எஸ் (Mi – Xiaomi Redmi 1S)

xiomi

மிகப்பிரபலமான ஆன்லைன் விற்பனைத்தளம் Flipkart ல் விற்பனைக்கு வந்திருக்கும் சீனாவின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் ஸ்யோமி (Xiaomi) நிறுவனத்தின் ரெட்மி Redmi 1S ரூ5,999 க்கு ப்ளீப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள் –

1) 1.6 GHz quad-core Qualcomm Snapdragon 400 processor with Cortex-A7 core இருப்பதால் தடையற்ற வேகத்தில் இந்த மொபைல் போன் இயங்கும், குறைந்த பேட்டரியிலும் நுட்பமாக வேலை செய்யும் ஆற்றலுடையது.

2) Adreno 305 image processor இருப்பதால் displayயில் தெளிவான படக்காட்சிகள் தெரியும்.

3) 8 GB உள்ளீட்டு நினைவகத்தோடு வருவதால் உடனடியாக மெம்மரி கார்டு தேடி அலைய வேண்டாம் மேலும் 32GB மெமரிகார்டும் போட்டுக்கெள்ளலாம்.

4) 4.7 இன்ச் ஸ்கீர்ன் சைஸ் IPS டிஸ்ப்ளேயுடன் வருவதால் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியான துள்ளியமாக காட்சிகள் தெரியும்.

5) இரண்டு மைக்ரோ சிம்கார்ட் ஸ்லாட்டுகள் உள்ளது ஒன்றில் 3G வேலை செய்யும் மற்றொன்று 2Gக்கு.

6) ஸ்யோமி வகை போன்களின் ஹிட்டுக்கு காரணம் மிகச்சிறந்த கேமிரா இருப்பதாகும். இதிலும் 8 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா உள்ளது, உங்களது அருமையான நினைவுகளை அழகாக படம்பிடிக்க இது உதவும். 1080 p வீடியோவையும் காட்சிப்படுத்தலாம்.

7) உயர்தர கார்களான BMW, BENTLEY மற்றும் Rolls Royce கார்களில் இருக்க கூடிய ஆடியோ சிஸ்டமான Hi-Fi System with Dirac சவுண்ட் டெக்னாலஜியுடன் இந்த போன் வந்திருக்கிறது. இது பாட்டு கேட்கும் அனுபவத்தை மேலும் பரவசமாக்கும்.

8) Li-Ion 2000 mAh பேட்டரியுடன் வருகிறது.

9) Android v4.3 (Jelly Bean) இயங்கு தளம் இதில் நிறுவப்பட்டுள்ளது. வாங்கியவுடன் KITKAT அப்டேட் செய்ய வசதியுள்ளதாக தெரிகிறது.

10) எடை 158 கிராம், அளவு 69x137x9.9mm

இந்த போனை flipkart-ல் பதிவு செய்து மட்டுமே வாங்க இயலும் அதுவே இதன் குறையாக கருதப்படுகிறது. பதிவு செய்து வாங்கும் நேரத்தில் இணையத்தில் அடிதடியேநடக்கிறது.

 


 ஆசுஸ் சென்போன் 5 (Asus Zenfone 5 A501CG)

zenfone-gold

கணினி தயாரிப்பில் வெற்றிநடைபோடும் ஆசுஸ் (Asus) நிறுவனம் மொபைல் போன் தயாரிப்பிலும் கால் வைத்தபோது முன்னணி நிறுவனங்களே சற்று பயந்து தான் போனது. குறைந்த விலை நிறைந்த தரம் இந்த தாரக மந்திரம் தான் Asus நிறுவனத்தை பொது மக்களிடம் சுலபமாக கொண்டு சென்றது. Asus தனது zen போன்கள் வரிசையில் வெளியிட்டிருக்கும் Asus Zenfone 5 A501CG அதன் போட்டியாளர்களான Xiaomi மற்றும் Micromax நிறுவத்தின் போன்களுக்கும் கடுமையான போட்டி தான். இந்த மொபைலின் பட்டியல் விலை ரூ.9999.

சிறப்பம்சங்கள் –

1) ZenFone 5’s Intel® processor இருப்பதால் பல தரப்பட்ட வேலைகளை ஒரே சமயத்தில் செய்யும் ஆற்றலை கொண்டது இந்த போன். இந்த அதிவேகமான ப்ராசஸ்சரின் வேகம் விளையாட்டுக்கு தயைடற்ற அனுபவத்தை தரவல்லது.

2) நவீன தொழில் நுட்பத்தில் இந்த போனின் ஆன்டனா வடிவமைக்கப்பட்டுள்ளது ஆதலால் இரண்டு சிம்களும் ஒரே நேரத்தில் இயங்கும். HSPA+ இருப்பதால் டவுண்ட்லோடும் வேகமாக நடக்கும். இரண்டு மைக்ரோ சிம்கார்ட் ஸ்லாட்டுகள் உள்ளது.

3) இதன் display Gorilla Glass 3 யுடன் இருப்பதால் கிழே விழுந்தாலும், கீறல் ஏற்பட்டாலும் போனை பாதிக்காவண்ணம் Gorilla Glass உறுதியாக தாங்கி கொள்ளும்.

4) Asus TruVivid technology யுடன் இதன் display இருப்பதால் படம் காட்சிகள் பார்க்கும் போது உங்களை அறியாமல் அதில் மூழ்கி போவீர்கள்.

5) 5 இன்ச் ஸ்கீர்ன் சைஸ் 1280 x 800 HD IPS+ display டிஸ்ப்ளேயுடன் வருவதால் அற்புதமான துள்ளியமான காட்சிகள் தெரியும்.

6) PixelMaster டெக்னாலஜியுடன் இருக்கும் 8 மெகாபிக்ஸல் கொண்ட பின்புற கேமிரா மற்றும் 2 மெகாபிக்ஸல் கொண்ட முன்புற கேமரா 5 வகையான சிறப்பு வசதிகள் கொண்டது, இந்த கேமிரா உங்களுக்கு நம்பமுடியாத தரம் கொண்ட படத்தை தரும்.

7) Asus ன் சிறந்த மென்பொருள் வல்லுனர்கள் கொண்ட Golden Ear Team வடிவமைத்த SonicMaster சவுண்ட் டெக்னாலஜியுடன் இந்த போன் வந்திருக்கிறது. எந்த ஒரு சமரசத்திற்கு இடமில்லாத வகையில் ஒலி அனுபவம் வழங்க வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது .

8) Li-Ion 2110 mAh பேட்டரியுடன் வருகிறது. 18 hrs (3G) பேசும் நேரமாகவும் 353 hrs (3G) இயங்கும் நேரமாகவும் ஆய்வாக அறிக்கையில் தெரிவிக்கிறார்கள். இது இடத்துக்கு இடம் சற்று மாறுபடும்.

9) Android v4.3 (Jelly Bean) இயங்கு தளம் இதில் நிறுவப்பட்டுள்ளது. வாங்கியவுடன் KITKAT அப்டேட் செய்ய து கெள்ள வசதியுள்ளது.

10) எடை 145 கிராம், அளவு 72.8×148.2×10.34 mm

11) 16 GB உள்ளீட்டு நினைவகத்தோடு வருவதால் மெம்மரி கார்டு வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. மேலும் 64GB மெமரிகார்டும் போட்டுக்கெள்ளலாம்.

என்ன வாசகர்களே புதியதொரு போனை வாங்க கிளம்பிட்டிங்களா இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரை பதிவேற்றும் கடைசிநேரம் வரை அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டுள்ளது. வாங்கும் முன்பு இந்த தகவல்கள் சரியாக உள்ளதா என ஒரு முறை சரிப்பார்த்துக்கொள்ளவும்.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா அப்படின்னா இந்த பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்களேன்.

Web : http://www.shruti.tv
Youtube : https://www.youtube.com/shrutitv
Like Us: https://www.facebook.com/shrutitv
Twitter : https://www.twitter.com/shrutitv
G+ : https://plus.google.com/+ShrutiTv
– Brand and product names mentioned are trademarks of their respective companies.
– All specifications are subject to change without notice.
– Please check with your supplier for exact offers.
– Products may not be available in all markets.

Share