நான் பெயில் இல்லங்க மறுக்கிறார் லட்சுமி மேனன்

Lakshmi-menon

தமிழகத்தில் நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியானது, கேரளாவிலும் பிளஸ் +2 தேர்வு முடிவு வெளியானதாகவும், அதில் நடிகை லட்சுமிமேனன் கணக்கு பாடத்தில் ‘பெயில்’ ஆகிவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் கேலியும், கிண்டலுமாக செய்திகள் பரவின. அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த லட்சுமிமேனன் அந்த செய்திகளை மறுத்துள்ளார். படப்பிடிப்பில் இருந்த லட்சுமிமேனனிடம், சமூகவலைத்தளங்களில் பரவிய செய்திகள் பற்றி கேட்டபோது, “நான் மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டத்தில் படிக்கவில்லை. CBSC பாட திட்டத்தின் படி படித்தேன். CBSC-யில் தான் +2 தேர்வு எழுதினேன். அந்த தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. 20ஆம் தேதிக்கு பிறகுதான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்கிறோம். +2 தேர்வில் நான் ‘பெயில்’ ஆனதாக வெளியான தகவல் தவறானது. அந்த செய்தியை யாரும் நம்பவேண்டாம்” என்று தெரிவித்தார்.

Share