தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கம்” D 43 “

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கம்” D 43 “

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கம்” D 43 ” படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது !

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து 2020 பொங்கலுக்கு வெளியாகி வெற்றிபெற்ற படம் பட்டாஸ். இந்த  படத்தை  தொடர்ந்து நடிகர் தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய  கார்த்திக் நரேன் இயக்குகிறார் .
தனுஷின் 43 வது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி   பிலிம்ஸ் நிறுவனத்துடனும்  கார்த்திக் நரேன் முதன்முறையாக இணைகிறார் .

பொல்லாதவன் , ஆடுகளம் , மயக்கம் என்ன மற்றும்  அசுரனின் அசுர வெற்றிக்கு பிறகு GV பிரகாஷ் 5 வது முறையாக தனுஷுடன் கைகோர்க்கிறார் .

இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். நடிகை  ஸ்முருதி வெங்கட் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்கு கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பிரபல ஸ்டுடியோவில் பூஜையுடன் தொடங்கியது . முதல்நாள் படப்பிடிப்பாக ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் தனுஷ் பாடிய பாடலுக்கு படப்பிப்பு நடைபெற்றது . பாடல் வரிகளை விவேக் எழுத , நடன இயக்குனராக ஜானி பணியாற்றுகிறார் .

Share