ஆருத்ரா – படம் எப்படி ?

ஆருத்ரா – படம் எப்படி ?

இயக்கம் : பா.விஜய்

நடிப்பு : பா.விஜய்

பாக்கியராஜ்

SA.சந்திரசேகரன்

YG.மகேந்திரன்

சஞ்சிதா ஷெட்டி

மெகாலி

ஒளிப்பதிவு : சஞ்சய் லோகநாத்

படத்தொகுப்பு : ஷான் லோகேஷ்

இசை : வித்யாசாகர்

தயாரிப்பு : பா.விஜய்

தேனாண்டாள் பிலிம்ஸ்

நீளம் : 126 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் : சிவன் சம்பந்தப்பட்ட பல்வேறு புண்ணியஸ்தலங்களில் கொடூரமான முறையில் தொடர் கொலை சம்பவங்கள் நடைபெருகிறது. அதில் சம்பந்தப்பட்ட ஒருவரை கண்டுபிடிக்க போலீஸார், துப்பறிவாளர் ஆவுடையப்பன் (பாக்கியராஜ்) உதவியை நாடுகிறார்கள். இக்கொலைகள்?, எதற்காக நடக்கிறது, யார் செய்கிறார்கள்?, ஏன் செய்கிறார்கள்? என்பதை விளக்குகிறது திரைக்கதை.

 

பலம் …

+ கதைக்கரு : சாமீபத்திய நிகழ்வுகள் பலவற்றை நினைவுபடுத்தும் இப்படத்தின் கதைக்கரு படத்திற்கு பெரிய பலம். குழந்தை பாலியல் வன்கொடுமை சார்ந்த காட்சிகளில் மிகவும் ஆழம் நிறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு

 

+ துப்பறியும் காட்சிகள் : பாக்கியராஜ் சம்பந்தப்பட்ட துப்பறியும் காட்சிகள் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருந்தது. இடைஇடையே   வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் காமெடிக்கள் மட்டுமே இடையூறாக அமைந்திருந்தது.

 

+ இசை : வித்யாசாகர் அவர்களின் பிண்ணனி இசையும், பாடல்களும் நன்று. பாடல்கள் படமாக்கிய விதமும், அவை திரறுகதையில் அமைந்த விதமும் சிறிது பொறுமையை சோதிக்கிறது.

 

பலவீனம் …

– திரைக்கதை : எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதை படத்திற்கு பெரிய பலவீனம். திரைக்கதையில் பெரும் திருப்பங்கள் அனைத்தும் முதலிலேயே கணிக்கக்கூடிய அளவிற்க்கே இருந்தது திரைக்கதை.

 

– காமெடி காட்சிகள் : திரைக்கதையை இடையிடையே லேசாக்க வைக்கப்பட்ட காமெடி காட்சிகள் அத்தனையும் படத்திற்கு பாதகமாக அமைந்தது பெருங்குறை. முனைவர்.ஞானசம்பந்தம் மற்றும் ராஜேந்திரன் அவர்களின் காமெடிக்கள் ரசிக்கும் விதத்தில் அமையவில்லை.

 

தான் ஒரு துப்பறிவாளன் என்பதை வெளிப்படையாகவே சொல்லும் பாகியராஜ் கதாபாத்திரம், தனக்கு ஒரு குடும்பம், ஒரு குழந்தை இருப்பதாகவும் சித்தரிக்கப்படும் விஜய் கதாபாத்திரம், பிற்பாதியில் எல்லாம் செயற்கையே என்று சொல்லும் விதமும், துப்பறிவாளனின் உதவியாளராக வரும் இருவர், கதாபாத்திரத்திற்கு சம்பந்தமான வேலையை செய்யாமல் இருப்பது என்று அனைத்து கதாபாத்திரமும் படு பலவீனம். பாக்கியராஜ், YG மகேந்திரன், SA.சந்திரசேகரன் போன்ற மூத்த கலைஞர்களை வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தது கவனத்தை ஈர்த்தது.

 

ஒளிப்பதிவு, CG என்று முக்கிய இலாக்காக்கள் அனைத்தும் தரத்தில் பின்தங்கி இருப்பது வருத்தம். குறிப்பாக Greenmat காட்சிகள் அனைத்தும் அப்பட்டம். இருந்தும் படத்தொகுப்பில் ஒரு சில பரிசோதனை முயற்சிகள் பாராட்டத்தக்கதாகவே தென்பட்டது. அவ்விடங்களில் இயக்குனர் பா.விஜய் ஒளிர்கிறார். தவிர, கதாபாத்திரங்கள் அவ்வப்போது யோசிப்பது போல் தோன்றும் flashcuts ரசிகர்கள் பொறுமையை சோதித்ததும் உண்மையே.

 

மொத்தத்தில் : ஆழமான கதைக்கருவிற்காகவும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட சமூக கருத்து காட்சிகளுக்காகவும் இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம். மேலும், திரைக்கதையிலும், படமாக்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் மெருகேறி இருக்கும்.

 

மதிப்பீடு : 2.50 / 5 …

Share