மேற்குத் தொடர்ச்சி மலை – படம் எப்படி ?

மேற்குத் தொடர்ச்சி மலை – படம் எப்படி ?

இயக்கம் : லெனின் பாரதி
நடிப்பு : ஆன்டனி
காயத்ரி கிருஷ்ணா
அபு வலையன்குளம்
சுடலை
தேவாரம் சொர்ணம்
ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்
படத்தொகுப்பு : மு. காசி விஸ்வநாதன்
இசை : இளையராஜா
தயாரிப்பு : விஜய் சேதுபதி
நீளம் : 119 நிமிடங்கள்

 

கதை : ரங்கசாமி (ஆன்டனி) என்கிற கதாபாத்திரத்தின் 15 வருட பயணத்தின் வழியே, மலை வாழ் மக்களின் வாழ்வியலையும், வணிகத்தையும் நவீனமய அரசியல் உலகம் எவ்வகையில் சீர்குலைத்திருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டு காட்டுகிறது இப்படம்.

 

பலம் …

+ நடிகர்கள் தேர்வு : முதன்மை கதாபாத்திரங்களை தவிர, படத்தில் தோன்றும் அதனை முகங்களும் புதுமுகங்களே. நடிப்பில் அவ்வப்போது முதிராத்தன்மை வெளிப்பட்டாலும், மலைவாழ் மக்களின் பிரதிநிதிகளாக நம் கண்முன்னே உலாவுகின்றனர்.

+ ஒளிப்பதிவு : திரையில் காண்பவை அத்தனையும் நம் கண்முன்னே நடப்பதைப்போன்ற உணர்வை தருகிறது, தேனி ஈஸ்வர் அவர்களின் ஒளிப்பதிவு. டிரோன் காட்சிகளில் தான் எத்தனை உயிரோட்டம்!!. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் ஒரு ஷாட் காட்சி, அருமை.

+ இசை : பெரும்பாலும் படம் பின்னணி இசையே இல்லாமல் தான் பயணிக்கிறது. இடையிடையே உதிக்கும் பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. பாடல்கள் வேகத்தடையே ஆனாலும், கதை நகர்விற்கு பெரிதும் உதவுகிறது.

+ எழுத்து : வசனங்களிலும், வசன நடையிலும் தான் எவ்வளவு நேர்த்தி!!. துரைராஜ் அவர்களின் வசனங்கள் சிறப்பு. திரைக்கதையின் ஊடே அங்கங்கே உதிக்கும் சமூக கருத்துக்களை மிகை படுத்தாமல் இயல்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் சிறப்பு.

 

பலவீனம் …

– முதல்பாதி : பெரிதாக போர் அடிக்கவில்லை என்றாலும், மைய்யப்புள்ளி இல்லாமல் பயணிக்கும் முதல்பாதி, சற்று நீள்வதைப்போன்ற உணர்வை தருகிறது. இடைவெளி காட்சியிலும் பெரிதாக எந்த தாக்கமும் ஏற்படவில்லை.

முதலாளித்துவம், கம்யூனிசம், விவசாயி பிரட்சனை என்று பல தளங்களில் இப்படம் பேசினாலும், எதையும் ஆழப்படுத்தி கூறாமல், மேலோட்டமாகவே பயணித்தது படத்தின் பெரிய பலம். காட்சிப்படுத்த முடியாத பல விஷயங்களை, பின்னணியில் வசனங்களாக வைத்திருப்பது அதனினும் சிறப்பு.

மேற்கு தொடர்ச்சி மலையின் நவீன உலக மாற்றத்தை பற்றின பதிவை திரைப்படமாக்கிய இயக்குனர் லெனின் பாரதியின் எண்ணத்திற்ற்க்காகவே ஒரு பூங்கொத்து. அதில் மண்சார்ந்த மனிதர்களையே கதாபாத்திரமாக்கி, அவற்றை இந்த அளவிற்கு வெற்றிகரமாக திரையில் பிரதிபலித்து இருப்பது பெரும் ஆச்சரியம். பல இடங்களில், நவீன தொழில்நுப்பம் எதுவும் உபயோகிக்காமலேயே அட போட வைத்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் : மெதுவாக பயணித்தாலும், சிறந்த படத்தை பார்க்க நினைப்பவர்களும், தமிழில் உலக சினிமா பார்க்க நினைப்பவர்களும், அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம்.

 

மதிப்பீடு : 3.75 / 5 …

Share