ஜூங்கா – படம் எப்படி ?

ஜூங்கா – படம் எப்படி ?

இயக்கம் : கோகுல்

நடிப்பு : விஜய் சேதுபதி

யோகி பாபு

சாயேஷா

மடோனா சபேஸ்டின்

சரண்யா பொன்வண்ணன்

சுரேஷ் மேனன்

ஒளிப்பதிவு : டட்லி

படத்தொகுப்பு : V.J.சாபு ஜோசப்

இசை : சித்தார்த் விபின்

தயாரிப்பு : விஜய்சேதுபதி

நீளம் : 157 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் :

பேருந்து நடத்துனராக பணிபுரியும் ஜூங்காவுக்கு (விஜய் சேதுபதி) தான் ஒரு டான் குடும்பத்தின் வாரிசு என்றும், சென்னையில் தனக்கு சொந்தமான திரையரங்கம் ஒன்றை தனது அப்பா ஏமார்ந்து விற்றுவிட்டார் என்றும் கேள்விப்படுகிறேன். அந்த தியேட்டரை மீட்டு எடுக்கும் முயற்சியில், கதை பிரான்ஸ் வரை செல்ல, கடைசியில் என்ன ஆனது என்று நீண்டு விவரிக்கிறான் ஜூங்கா.

 

+ பலம் …

+ விஜய்சேதுபதி : கஞ்சத்தனமான டான் கதாபாத்திரத்தை கண்முன்னே கொண்டு வருகிறார். குறிப்பாக, சுரேஷ் மேனோனிடம் சவால் விடும் காட்சி மனதில் நிற்கிறது. இறுதி காட்சிகளில் கதாநாயகி சாயேஷாவுக்கு தனது நிலைமையை எடுத்துச்சொல்லும் இடத்தில நடிப்பு வாய்ப்பேயில்லை.

 

+ ஒளிப்பதிவு : பொள்ளாச்சி முதல் பிரான்ஸ் வரை, கண்ணில் காணும் இடங்கள் அத்தனையும் ஒளிப்பதிவாளர்  டட்லி’யின் கண்வழியே அத்தனை அழகு. நீளம், பச்சை, மஞ்சள் என்று காட்சிகளுக்கு ஏற்றாற்போல் ஒளிஅமைப்பில் வித்யாசம் காட்டி பார்வையாளர்களுக்கு திரைவிருந்து அளித்து இருக்கிறார்.

 

+ இசை : ‘கூடவே’ பாடல் காதுக்கு இனிமை,  சாயேஷாவின் அறிமுக பாடல், இசை அளவிலும், படமாக்களிலும் அத்தனை வித்யாசம். பின்னணி இசையிலும் சித்தார்த் விபின் முத்திரை பதிக்கிறார்.

 

– பலவீனம் …

– திரைக்கதை : முதல் 30 நிமிட காட்சிகள் கதையோடு ஒட்டாவிட்டாலும், விஜய்சேதுபதியின் சென்னை வருகையைத் தொடர்ந்து இடைவேளை திரைக்கதையில் ரசிகர்களிடையே ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. இரண்டாம்பாதி தான் படத்தின் ஆகப்பெரும் சொதப்பல். பிரான்ஸை மைய்யமாகக்கொண்ட காட்சிகளில் துளியும் நம்பகத்தன்மை இல்லை, நாடகத்தன்மை தூக்கல்.

 

– கதாபாத்திரங்கள் : ஜூங்கா கதாபாத்திரத்தை தவிர, மற்ற எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை. படத்தில் நிலையான வில்லன் இல்லை என்பது பெரும் பலவீனம். சுரேஷ் மேனனின் கதாபாத்திரம் ஓரளவிற்கு மிரட்ட செய்தாலும், அவர் செய்கைகள் சிரிப்பாய் வரவழைக்கிறது. ஜூங்கா சொல்லும் கடைசீ நேர கதைக்காக சொந்த அப்பாவையே ஏமாற்றும் யாழினி கதாபாத்திரத்தை புரிந்துகொள்ளவே முடியவில்லை. மடோனா கதாபாத்திரம் வீண்.

 

விஜய்சேதுபதியின் பாட்டி கதாபத்திரமும் அதற்குண்டான நடிகர் தேர்வும் அட்டகாசம். தனது குடும்பப்பின்னணியை விவரிக்கும் இடத்தில மிளிர்கிறார் சரண்யா பொன்வண்ணன். சாயேஷா’வின் நடன அசைவுகலில் எத்தனை நளினம்!!. பார்க்கவும் அழகாக தெரிகிறார். யோகிபாபு தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

 

வெளிநாட்டில் ஒரு கதை, அதை சம்பந்தப்படுத்தி உள்நாட்டில் நடக்கும் குழப்பங்கள் என்று ஹாலிவுட் மசாலா பட பாணியில் ஒரு காமெடி படத்தை எடுக்க முற்பட்டு பெரும் சரிவை சந்தித்து இருக்கிறார் இயக்குனர் கோகுல். ஒரு வித்யாசமான டான் கதையை கையாள இவர் எடுத்திருக்கும் முயற்சிகள் அத்தனையும் நன்று, இருப்பினும் அதற்க்கு வெளிநாடு வரை சென்று, தீவிரவாதம், மாஃபியா என்று நீட்டமால் குறிப்பிட்ட கதாபாத்திரண்டவுடன், குறிப்பிட்ட வட்டத்துக்குள் முடிக்கப்பட்டிருந்தால், ஒரு தரமான படைப்பாக வெளிவந்திருக்கும் இந்த ஜூங்கா.

 

மொத்தத்தில் : படத்தின் நீளம், ஆழமில்லாத கதாபாத்திரங்கள், கவனத்தை  திரைக்கதை என்று குறைகள் பல தென்பட்டாலும், எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் ஒரு முறை பார்க்கலாம்.

Share