வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த – டாம் குரூஸ்!
டாம் குரூஸ் நடித்த மிஷன் இம்பாசிள் பட வரிசையில் ஆறாம் பாகமான ‘ஃபால்அவுட் ’இம்மாதம் ஜுலை 27 ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தியாவெங்கும் வெளியாகிறது.
இந்த படத்தைப் பற்றி நாயகன் டாம் குரூஸ் பேசுகையில்,‘ இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஹென்றி கேவீலின் கேரக்டர் தனித்துவமானது. பலம் வாய்ந்தது.அவர் ஒரு தடகள வீரரும் கூட. கவர்ச்சியான தோற்றப் பொலிவைக் கொண்டிருப்பதால் திரையை தன்னுடைய கட்டுப்பாட்டில் அற்புதமாக வைத்திருக்கிறார். இயக்குநர் இவருடைய கேரக்டரை தனிப்பட்ட முறையில் வித்தியாசமான உருவாக்கியிருக்கிறார். இவர் திரையில் தோன்றும் போது ரசிகர்களின் மனநிலை முற்றிலும் வேறு வகையில் இருக்கும். அவர் ஒரு சூப்பர்மேன் போல் திரையில் அற்புதமாக நடித்திருக்கிறார். ’ என்றார்.
அந்த குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தைப் பற்றி இயக்குநர் குவாரி குறிப்பிடுகையில்,‘ இந்த கேரக்டர் வைல்ட் கார்ட் போல் கதையில் அறிமுகமாகி, கதையின் போக்கை சுவராசியமானதாக்கி, ரசிகர்களை உற்சாகமடைய செய்யும் அமைந்துவிட்டது.’ என்றார்.
இந்த படத்தில் நடிகர் ஹென்நி கேவீல் சி ஐ ஏ வின் உளவாளி ஆகஸ்ட் வாக்கர் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை பாரவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதனை இந்தியாவெங்கும் வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.
Share
Social