வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 741.94 புள்ளிகளாக சரிந்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 99.79 புள்ளிகள் உயர்ந்து 33,275.79 புள்ளிகளாக உள்ளது. உலோகங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.25% அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18.95 புள்ளிகள் அதிகரித்து 10,176.20 புள்ளிகளாக உள்ளது.

கோல் இந்தியா, ஏஷியன் பெயின்ட்ஸ், அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ மற்றும் விப்ரோ போன்ற நிறுவன பங்குகள் விலை 3% வரை உயர்ந்து காணப்பட்டது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.35% மற்றும் சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.13% உயர்ந்துள்ளபோது, ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.89% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 0.29% வரை உயர்ந்து முடிந்தது.

Share