“காசு மேலே காசு” இசை வெளியீட்டு விழா

“காசு மேலே காசு” இசை வெளியீட்டு விழா

“காசு மேலே காசு” இசை வெளியீட்டு விழாவில் நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.

நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் “காசு மேலே காசு” இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், P.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசியதாவது..

ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பது ஈஸி ஆனால் காமெடியனாக நடிப்பதற்கு ஹார்சிய உணர்வு நிறைய வேண்டும். ஹார்சிய உணர்வு அதிகம் மிக்கவன் மயில்சாமி அதைவிட இதயம் சுத்தமானவன். மக்களை மகிழ்விப்பதில் மன்னன். எனக்கு ஹார்சிய உணர்வு கொஞ்சம் கூட இல்லை. ஆனால் இந்த படத்தின் அழைப்பிதழ் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிச்சேன். இந்தப்படத்தின் பாடல்களை பார்த்தேன் நிச்சயம் இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்.

நம் நிலம் களவாடப்படுகிறது, மொழி களவாடப்படுகிறது, கொஞ்சம் விட்டால் இந்த இனமே களவாடப்படும் முழித்துக்கொள். டைனோசர் இனம் அழியக்காரணம் அதனிடம் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். தமிழனுக்கு ருத்ரம் இப்போது அதிகமாக தேவைப்படுகிறது.

நானும் ஆன்மீகவாதி தான். முருகன் என்பவன் ஆறுபடை வீடுகளை ஆண்ட சாதாரண மனிதன் பின்னாளில் நாம் தான் கடவுள் ஆக்கிட்டோம்.

இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் நீ யாராகவோ இரு ஆனால் ஆட்சியில் இருக்கும் அஞ்சு வருசம் P.M, C.M ரெண்டு பேருமே காமன் மேனாக இருக்க வேண்டும் என்று ஆளுகின்ற கட்சிகளுக்கு ஏதோ உணர்த்துவதைப்போல பேசினார்.

கதாநாயகன் ஷாருக், நாயகி காயத்ரி படத்தில் இன்னொரு ஹீரோவாக மயில்சாமி நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி, மதுமிதா, லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோர் நடித்த முழு நீள காமெடி படம் “காசு மேலே காசு”

இசை பாண்டியன், கேமரா சுரேஷ்தேவன், பாடல்கள் கருப்பையா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கே.எஸ்.பழனி.

தயாரிப்பு
P.ஹரிஹரன்
B.உதயகுமார்
P.ராதாகிருஷ்ணன்.
எக்ஸ்குயூட்டிவ் புரொட்யூசர் A.சுதாகர்

 

 

Share