பாகமதி – படம் எப்படி ?

பாகமதி – படம் எப்படி ?

 

எழுத்து & இயக்கம் : G.அசோக்

நடிப்பு : அனுஷ்கா

ஜெயராம்

உன்னி முகுந்தன்

ஆஷா ஷரத்

முரளி சர்மா

வித்யுலேகா ரமணன்

ஒளிப்பதிவு : R.மதி

சுசீல் சௌத்ரி

படத்தொகுப்பு :  கோக்தகிரி வெங்கடேஸ்வர ராவ்.

இசை : SS தமன்

தயாரிப்பு : வம்சி கிருஷ்ணா ரெட்டி

பர்மோத்

நீளம் : 139 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் :

ஆளுங்கட்சியின் வெறுப்பை சம்பாதிக்கும் அமைச்சர் ஈஸ்வர் பிரசாத் (ஜெயராம்) பெயரை களங்கம் விளைவிக்கும் பொருட்டு, ஒரு கொலைவழக்கு குற்றவாளியான அவரது முன்னாள் உதவியாளர் சஞ்சலாவை (அனுஷ்கா) ரகசியமாக விசாரிக்க, ஊர் ஒதுக்குபுறமாக இருக்கும் ஒரு பாழடைந்த கோட்டையை தேர்ந்தெடுக்கிறது சிபிஐ. பின்னர் நடக்கும் சம்பவங்களே திரைக்கதை.

 

பலம் …

+ அனுஷ்கா : முதல்பாதியில் அமைதியையும் ஆக்ரோஷத்தையும் கலந்துகட்டி அடித்து, இரண்டாம் பாதியில் நேர்மாறாக மாறும் இவரது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார் அனுஷ்கா.

 

+ ஜெயராம் : இரண்டாம்பாதியில் ஒரே அறையில் நடக்கும், அனுஷ்கா – ஜெயராம் சம்பந்தப்பட்ட ஆடு புலி ஆட்டம், படத்திற்கு பெரும் பலம். ஜெயராமின் பன்முக நடிப்பை முழுமையாக பயன்படுத்தி உள்ளனர்.

 

+ ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் : இரண்டு இலாக்காக்களும் நம்மை முதல்பாதியில் அவஸ்த்தை பாடவைத்து, இரண்டாம்பாதியில் நிவாரணம் கொக்டுத்திருக்கிறார்கள். முதல்பாதி வசனங்கள் அனைத்திற்கும் திரைவடிவம் கொடுக்கும்பொழுது மிளிர்கிறார் படத்திகுப்பாளர் கோக்தகிரி வெங்கடேஸ்வர ராவ்.

 

+ இசை & கலை : SS.தமனின் இசையில் முதல்பாதி பின்னணி இசை திகில், இரண்டாம் பாதி த்ரில்.  அரண்மனை செட் அமைப்பும், அவைகளின் நுணுக்கமான விவரங்களும் அசத்தல்.

 

பலவீனம் . . .

 

– முதல்பாதி : முதல்பாதி திரைக்கதையில் ஏகப்பட்ட பழமை சாயல். எந்த விதத்திலும் புதுமை இல்லாத, அரதப்பழைய பேய் காட்சிகளும், சிரிப்பூட்டும் இடைவேளை வசனங்களும் படத்திற்கு பெரிய பலவீனம்.

 

– லாஜிக் ஓட்டைகள் : தொடக்கம் முதல் இறுதி வரை பல்வேறு லாஜிக் சிக்கல்கள் படம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. அதிலும், இரண்டாம்பாதி திருப்புமுனை காட்சிகள் ஒன்றொன்றும் லாஜிக் அபத்தங்கள்.

 

உன்னி முகுந்தன், ஆஷா ஷரத், இருவரின் கதாபாத்திரத்திலும் தெளிவில்லை என்றாலும், கதையை நகர்த்த பெரிதும் உதவுகிறார்கள். முரளி சர்மா, வித்யுலேகா ரமணன் உட்பட அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறு கதாபாத்திரங்களை செம்மையாக செய்திருக்கிறார்கள்.’சொல்வவதை வேகமாக சொல்லிவிட்டால் Logic’க்கு மதிப்பு இருக்காது’ என்ற #Hari Formula’வை தாங்கி வரும் இரண்டாம் பகுதி Twist’கள், ‘காதில் பூங்கொத்து’ என்றாலும், ‘நல்லாத்தானே இருக்கு’ ரகம். Pizza பாணிக்கதையை அவர் Style’லில் மெருகேற்றி, மக்களை திசைதிருப்பி முயற்சித்திருக்கிறார் இயக்குநர் G.அஷோக். இருப்பினும், சொல்லவந்ததில் லாஜிக் குறைகளை தகர்த்த முயற்சித்திருந்தால், இன்னும் சிறப்பாகவே அவதரித்திருப்பாள் ‘பாகமதி’.

 

மொத்தத்தில் : லாஜிக் யோசனைகளை தவிர்த்துவிட்டு, திரையில் சொல்வதைமட்டும் கேட்டுக்கொண்டால், தாராளமாக ஒரு முறை பார்க்கலாம் இந்த ‘பாகுமதி’யை.

 

மதிப்பீடு : 2.75 / 5 . . .

 

Share