நிமிர் – படம் எப்படி ?

நிமிர் – படம் எப்படி ?

இயக்கம் : ப்ரியதர்ஷன்

நடிப்பு : உதயநிதி ஸ்டாலின்

நமீதா பிரமோத்

பார்வதி நாயர்

மகேந்திரன்

சமுத்திரக்கனி

MS பாஸ்கர்

கருணாகரன்

அருள் தாஸ்

கஞ்சா கருப்பு

ஒளிப்பதிவு : NK ஏகாம்பரம்

படத்தொகுப்பு : MS அய்யப்பன் நாயர்

இசை :  தர்புகா சிவா

அஜினேஷ் லோக்நாத்

ரோனி ராப்பெல்

தயாரிப்பு : சந்தோஷ் T குருவில்லா

உதயநிதி ஸ்டாலின்

நீளம் : 130 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் : ‘நேஷனல்’ செல்வம் (உதயநிதி), ஒரு புகைப்பட கலைஞன், வள்ளி (பார்வதி நாயர்) என்கிற IT பெண்ணை காதலிக்கிறான். அவன் காதல் வழக்கை ஒரு சோகமான முடிவை எதிர்நோக்கும் நேரத்தில், அவன் வாழ்விலும் ஒரு நெருக்கடி ஏற்படுகிறது. இவற்றை செல்வம் எப்படி சமாளித்தான்? பின்னர் என்னென்ன நிகழ்ந்தது? என்கிறது நிமிரின் முழுநீள திரைக்கதை.

 

பலம் . . .

+ ஒளிப்பதிவு : NK ஏகாம்பரம்’த்தின் கண்கள் வழியே, படம்  நெடுக அழகு ஓவியங்கள். இரண்டாம்பாதியில், Photography சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு பிறகு வரும் காட்சிகள், கண்களை சுண்டி இழுக்கிறது.

 

+ இசை : தர்புகா சிவா மற்றும் அஜினேஷ் லோக்நாத் ஆகியோரின் பாடல்கள், காதுகளுக்கு இனிமை. இருப்பினும், அவை வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் சுமாரோ சுமார். ரோனி ராப்பெல்’லின் பின்னணி இசை பல இடங்களில் அமைதி, சில இடங்களில் நன்று.

 

+ காமெடி : வயிறுவிட்டு சிரிக்கும் ரகம் இல்லை என்றாலும், MS பாஸ்கர் – கருணாகரன் இவர்களின் காமெடி காட்சிகள் பல இடங்களில் ரசிக்கும் ரகம்.

 

பலவீனம் . . .

– திரைக்கதை : நம் பொறுமையை சோதித்தபிறகும் கதையை சொல்லாமல் நம்மை காக்க வைக்கும் இப்படத்தின் திரைக்கதை, படத்தின் மிகப்பெரும் பலவீனம். தமிழ் ரசிகர்களுக்கு இம்புட்டு பொறுமை இருக்கும்ன்னு படக்குழு முடிவுசெய்ததின் அடிப்படை புரியவில்லை.

 

– கதாபாத்திர தேர்வு : மலையாளத்தில் இருந்த கதாபாத்திரங்களின் நேர்த்திக்கு நேர்மாறாக அமைந்திருக்கிறது படத்தில் செய்யப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தேர்வு. சமுத்திரக்கனி, அருள்தாஸ், இம்மான் அண்ணாச்சி ஆகியோரின் கதாபாத்திரங்கள் திணிக்கப்பட்டது போன்ற உணர்வை கொடுத்தது.

 

நமீதாபர்மோத் கொஞ்சம் பரவாயில்லை, #பார்வதிநாயர் படத்தில் கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. மகேந்திரன் இப்படத்தில் நடிக்க இப்படம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். #MSபாஸ்கர் சில இடங்களில் நன்று, பல இடங்களில் ஓவராக புழிகிறார். #சமுத்ரகனி வரும் 2 கட்சிகளும், அவரது வசனங்களும் நன்று.

 

உதயநிதியின் கதாபாத்திரம் தான் படத்தின் ஆணிவேர். ஆனால், அவர் இந்த கதாபாத்திரத்தை சுமக்க முடியாமல் பல இடங்களில் திணறியதை நம்மால் கண்கூட பார்க்கமுடிந்தது. பல

இடங்களில் நடிக்க முயற்சித்திருந்தாலும், சில இடங்களில் மட்டுமே அதற்கேற்ற பலன் கிட்டி இருக்கிறது. ஒரு இயற்கையான கதையை, முடிந்த அளவிற்கு செயற்கைத்தனத்தை சேர்க்காமல் எடுத்திருக்கிறார் இயக்குனர் ப்ரியதர்ஷன். வசனங்களை குறைத்துக்கொண்டு, கதாபாத்திரங்கள் போதுமான அளவு முகபாவனைகள் பேசுவது மிகச்சிறப்பு. ஆரம்பத்தில் வரும் ஐட்டம் பட்டை தவிர்த்திருக்கலாம்.

 

மொத்ததில் : கமர்சியல் ரசிகர்களுக்கான படமாக இல்லாமல், ஒரு சீனியர் டைரக்டரின் படைப்பை நிதானமாக உக்கார்ந்து பார்க்க மனமிருப்பவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படமாக வந்துள்ளது #நிமிர்.

 

மதிப்பீடு : 2 / 5 . . .

Share