குலேபகாவலி – படம் எப்படி ?

குலேபகாவலி – படம் எப்படி ?

இயக்கம் : கல்யான்
நடிப்பு : பிரபுதேவா
ஹன்சிகா
‎ரேவதி
‎ராமதாஸ்
‎ஆனந்த்ராஜ்
‎மெட்டை ரராஜேந்திரன்
‎சத்யன்
‎மதுசூதனராவ்
ஒளிப்பதிவு : ஆனந்த்குமார்
படத்தொகுப்பு : விஜய்வேல்குட்டி
இசை : விவேக் – மெர்வின்
தயாரிப்பு : கொட்டப்பாடி.ஜே.ராஜேஷ்
நீளம் : 129 நிமிடங்கள்.

மூலக்கதை : குளேபகாவலி கோவிலின் வெளிப்புற சுவரில் புதைக்கப்பட்டிருக்கும் புதையலை, ஆபத்துகளை மீறி எடுத்துவரும் பொருப்பு, சிலைத்திருடனான பத்ரியிடம் (பிரபுதேவா) ஒப்படைக்கப்படுகிறது. கூடவே அவரின் காதலி விஜி (ஹன்சிகா) மற்றும் முனீஸ் (ராமதாஸ்) இருவரும் செல்கின்றனர். பிறகு நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே திரைக்கதை.

பலம் . . .

+ பிரபுதேவா : பார்க்க மனிதன் இன்றும் 25+ போல இளமையாக உள்ளார். அதிரடி நடனம், சாந்தமான நடிப்பு என்று பின்னியிருக்கிறார்

+ ரேவதி : இவரின் பன்முக நடடிப்பை சரியாக வெளிகொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் கல்யாண். படம் முழுவதும் இவர் வரும் காட்சிசள் அனைத்தும் சரவெடி.

+ இசை : விவேக் – மெர்வின்’னின் இசை படத்திற்க்கு பெரிய பலம். பாடல்கள் அனைத்தும் குளிர்ச்சி, அதை படத்தில் வைத்த இடத்தில் சொதப்பல். பிண்ணனி இசைய் பரவாயில்லை ரகம்.

பலவீனம் . . .

– திரைக்கதை : தெளிவில்லாமல் நகறும் திரைக்கதை, படம் நெடுக பல கேள்விகளை விதைக்கின்றது. பல இடங்களில் லாஜிக் வேளியை தகர்த்து எரிகிறது.

– கதாபாத்திர வடிவமைப்பு : ரேவதி உட்பட படத்தின் எந்த கதாபாத்திர வடிவமைப்பிலும் தெளிவில்லை. மாஷா என்று பெயர் வைத்த பெண்மனி, கோவிலில் குறி சொல்லும் விந்நை இயக்குனருக்கு மட்டுமே வெளிச்சம்.

தவிர, படத்தில் இவர்கள் திரைக்கதையில் இவர்கள் பிரட்சனை என்று கூற மெனக்கெடும் பல விஷயங்கள் திரையில் சரிவர பிரதிபலிக்கவில்லை. உதாரனத்திற்க்கு,

கதையில் ஆபத்தான இடம் என சித்தரிக்கப்படும் கிராமத்தில், கோவில் சிலை திருட்டைக்கூட பெரிதுபடுத்தாமல் பஞ்சாயத்து என்கிற பெயரில் காமெடி செய்வது, கடுப்பு.

யோகிபாபு துவங்கி, ராமதாஸ், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், சத்யன் என பெரிய காமெடி பட்டாளமே படத்தில் உண்டு, ஆனால் காமெடி தான் ‘கினத்தை காணும்’ கதையாகிவிட்டது. ரேவதியின் மாஷா கதாப்பாத்திரத்தை தவிர வேரெந்த கதாபாத்திரமும் மனதில் தங்கவில்லை.

பிரபுதேவா நல்லா நடனமாடுகிறார் என்பது ‘இமயமலையில் ஐஸ் இருக்கிறது’ என்று சொல்வதைப்போல் ஆகும். ஒரு முகபாவனையில் மெத்த காட்சியையும் தூக்கி சாப்பிடும் ஒரு நடிகரை ஒரு பலவீனமான கதையில் தவிப்பதை பார்க்க கடினமாக உள்ளது. ஹன்சிகா வெரும் அழகுப்பதுமையே!!…

மொத்தத்தில் : நடக்கும் நிகழ்வுகளை கண்டுகொள்ளாமல், காமெடி என்றாலே சிரிக்கும் நபர் நீங்களாக இருப்பின், இது உங்களுக்கான படமே.

மதிப்பீடு : 2.25 / 5 . . .

Share