மாயவன் – படம் எப்படி ?

மாயவன் – படம் எப்படி ?

இயக்கம் : CV. குமார்

நடிப்பு : சந்தீப் கிஷன்

                 லாவண்யா திரிபாதி

                 டேனியல் பாலாஜி

                 மைய்ம் கோபி

                 ஜாக்கி ஷ்ராப்

                 பகவதி பெருமாள்

ஒளிப்பதிவு : கோபி அமர்நாத்

படத்தொகுப்பு : லியோ ஜான் பால்

இசை : ஜிப்ரான்                

நீளம் : 128 நிமிடங்கள்

நவீன முறையில் கூடுவிட்டு கூடு பாயும் வில்லன், அவனை விடாமல் துரத்தும் போலீஸ் ஹீரோ. இதுவே மாயவனின் சேதி.

 

கதைச்சுருக்கம் : சென்னையில், பல்வேறு இடங்களில் நடக்கும் ஒரே மாதிரியான கொலை சம்பவங்களை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி குமரன் (சந்தீப்கிஷன்), அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்ததும் குற்றவாளிகள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள, இவற்றின் பின்னணியில் அதி நவீன தொழில்நுட்பம் பயன்படுவதை கண்டறிகிறான். அந்த தொழில்நுட்பத்தையும், தொடர்கொலையையும் எப்படி கட்டுப்படுத்தினார் என்பதே திரைக்கதை.

 

பலம் . . .

 

+ மூலக்கதை : சிறுவயதில் நாம் கேள்விப்பட்ட கூடு விட்டு கூடு பாயும் கதையை, நாவீன தொழில்நுட்பத்தில் நமக்கு விவரித்த, படத்தின் இரண்டாம்பாதி காட்சிகளே படத்திற்கு பெரும்பலம்.

 

+ இசை : பாடல்கள் சுமார் ரகமாக இருந்தாலும், பின்னணி இசை படத்தின் த்ரில் அனுபவத்தை கூட்டுகிறது, குறிப்பாக இரண்டாம் பாதி.

 

+ இதர தொழில்நுட்பம் : லியோ ஜான் பாலின் எடிட்டிங், மற்றும் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு, படத்திற்கு கூடுதல் பலம்.

 

பலவீனம் . . .

 

திரைக்கதை : இரண்டாம்பாதியில் ஒரு சில பகுதிகள் தவிர்த்து, மற்ற இடங்களில் திரைக்கதை ஆமைவேகத்தில் பயணிக்கிறது. கதையின் முழுவடிவம் இரண்டாம்பாதியில் தான் நமக்கு தெரிய வருவதால், முதல்பாதி காட்சிகள் நம்மை சோதிப்பதை தவிர்க்கமுடியவில்லை.

 

காதல் காட்சிகள் : முதல்பாதி காதல் காட்சிகள், சுதீப்பின் ஒட்டுமீசையைப்போல் கதையோடு ஒட்டாமல் திரிகிறது. ஹீரோவின் மனநிலை பிரட்சனை சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு விளக்கங்களும், சுவாரசியமும் மிகக்குறைவு.

 

லாஜிக் : நவீன தொழில்நுட்பம் பலவற்றை, கதையின் அங்கமாக பாவிக்கப்பட்டாலும், அவற்றின் நம்பகத்தன்மை திரையில் குறைவாக காணப்படுகிறது. நாவீன கருவிகளின் செயல்பாட்டில் நமக்கு பல கேள்விகள் உதிப்பதை தவிர்க்கமுடியவில்லை. அவற்றுள் சில,

 

* செல்பேசி Tower மூலம் உயிர் தாவுவது எப்படி?

* நினைவாற்றலை இழந்த ஒருவன், அவன் வீட்டை நினைவுகொள்வது எப்படி?

* இவற்றை பயன்படுத்தும் வில்லனின் நோக்கம் உயிரை கொள்ளுவதா? சாகாவரத்தை அனுபவிப்பதா?.

 

சந்தீப் கிஷன், அவரது பங்கை சரியாக செய்திருக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரத்தில் வரும் பகவதி, கவர்கிறார். லாவண்யா திரிபாதியின் டப்பிங் lipsynk பிரச்சனைக்கு படத்தின் ஒரு இடத்தில கூட தீர்வு கிட்டவில்லை. டேனியல் பாலாஜி, மைய்ம் கோபி, ஜாக்கி ஷ்ராப் ஆகியோர் சிறு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி இருக்கிறார்கள்.

 

இயக்குனராக பரிமாற்றம் பெற்றிருக்கும் CVகுமார் அவர்களுக்கு கதை அளவில் இது ஒரு நல்ல முயற்சி தான் என்றாலும், திரைக்கதையின் பெரும்பாலான இடங்கள் அவரை கைவிட்டு விட்டது என்றல் மிகையாகாது. இரண்டாம்பாதியில் காட்சிகள் கதையை உயர்த்தி தூக்கினாலும், வெகுஜன மக்கள் தங்களை எந்த விதத்திலும் பொருத்திக்கொள்ளமுடியாத மேன்மைபோக்கே, இப்படத்தின் முக்கிய சிக்கல்.

 

மொத்தத்தில் : கதையளவில் இருக்கும் புதுமை, திரையில் மிளிராததால், மாயவனின் தேடுதல் பயணதின் சுவாரசியம், பாதியிலேயே மாயமாகிவிடுகிறது.

 

மதிப்பீடு : 2.25 / 5 . . .

Santhosh AVK

Share