ரிச்சி – படம் எப்படி ?

ரிச்சி – படம் எப்படி ?

இயக்கம் : கெளதம் ராமச்சந்திரன்

நடிப்பு : நிவின் பாலி

ஷ்ராத்தா ஸ்ரீநாத்

நட்ராஜ்

ராஜ் பரத்

பிரகாஷ்ராஜ்

ஆடுகளம் முருகதாஸ்

லட்சுமி

GK.ரெட்டி

இளங்கோ குமரவேல்

ஒளிப்பதிவு : பாண்டிகுமார்

படத்தொகுப்பு : அதுல் விஜய்

இசை : அஜனேஸ் லோக்நாத்

தயாரிப்பு : Trident  Arts

Yes Cinemas

Cast’n’Crew

நீளம் : 110 நிமிடங்கள்.

 

ஒரு சம்பவத்தை ஐந்து நபர்கள், வெவ்வேறு கோணங்களில் கூறும் #Rashomon_Effect’ஐ மைய்யப்படுத்தி வெளிவந்திருக்கும் படமே ரிச்சி.

 

கதைச்சுருக்கம்: மணப்பாடு பகுதியில் ஓர் கிறிஸ்துமஸ் இரவில் நடக்கும் மூன்று கொலைகள் நடக்க, அதை எல்லாரும் துண்டுசெய்தியாக கருதப்பட, அதே பகுதியைச்சேர்ந்த ஒரு பெண் பத்திரிக்கையாளர் (ஷ்ரத்தா), இதை ஆராய, அவருக்கு சொல்லப்படும் சம்பவங்களின் தொகுப்பே திரைக்கதை.

 

வெளிநாட்டுப்புதையல் ஒன்று கடலுக்கடியில் மூழ்கிவிட, அது ஒரு தமிழக மீனவனிடம் கிடைப்பதில் துவங்கும் படம், கடைசி 20 நிமிடங்கள் வரை ஒரே நேர்கோட்டில் வளராமல், மாறி மாறி பயணிக்க, இறுதிக்கட்ட காட்சிகளில் நமக்கு கதை புலப்படும் முன்னரே படம் முடிவுபெறுகிறது.

 

பலம் . . .

+ நிவின் பாலி : திரையில் சொற்ப நேரமே தோன்றினாலும், இவரின் இருப்பு படத்திற்க்கு பெரிய பலம்.

 

+ ஒளிப்பதிவு : ரிச்சி தோன்றும் காட்சிகள் மட்டும் சிகப்பு நிறம் நிறைந்து காணப்படுவது நன்று. மணப்பாடு கடல் சார்ந்த காட்சிகளில் பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு நன்று.

 

+ கதையுரைத்தல் : ஐந்து கோணங்களில் நகரும் காட்சிகள், வரிசையாக அமைக்கப்படாமல் ரசிகர்களை குழப்பினாலும், சோதைமுயற்சி என்றளவில் இவ்வகை கதையுரைத்தலை பாராட்டலாம்.

 

பலவீனம் . . .

 

– திரைக்கதை : ஆவணப்பட பாணியில் மெதுவாக நகரும் திரைக்கதை படத்திற்கு முதன்மை பலவீனம். எவ்வித வரையரையும், வரையறையும் இன்றி, ‘அன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?’ என்று கதாபாத்திரங்கள் கதை சொல்ல ஆரமிப்பதால், ரசிகர்களால் படத்தில் ஒன்ற முடியவில்லை.

 

– வசனம் & பாடல்கள் : படத்தில் வரும் பல வசனங்கள் டப்பிங் படம் பார்த்த உணர்வையே தருகிறது.  படத்தில் வரும் பாடல் வரிகள் அணைத்து செயற்க்கையாகவே தோன்றுகிறது.

 

கதையின் நாயகனாக சித்தரிக்கப்படும் ரிச்சி(நிவின் பாலி), பெயரளவில் படத்தில் நிறைந்து காணப்பட்டாலும், காட்சியளவில்  சொற்பநேரமே திரையில் தோன்றுகிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நட்ராஜ், ராஜ்பரத், இருவரின் நடிப்பும் நன்று. ஷ்ரத்தா, லட்சுமி, ஆடுகளம் முருகதாஸ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை செம்மையாக செய்திருக்கிறார்கள்.

 

அஜனேஸ் லோக்நாத்தின் பின்னணி இசை பல இடங்களில் நன்று, சில இடங்களில் இரைச்சல். அதுல் விஜயின் படத்தொகுப்பில், படம் ஒரு கோர்வையே இல்லாமல் கொத்து கொக்கதாக தென்படுகிறது.

 

Neo-Noir வகைரா படமான இப்படத்தின் மிகமுக்கிய பிரட்சனை, படத்தின் காட்சிக்கோர்வைகளும், படமாக்களும் தான். உதாரணத்திற்கு, படத்தின் நாயகன் ரிச்சி சிறைக்கு சென்று வந்த பின்னர், நண்பன் ராகுவின் மீது கோவம் கொள்கிறான், ஆனால் ‘அவர் செய்யத கொலைக்கு சிறை செல்கிறார், உண்மையில் கொலை செய்தது ரகு தான்’ என்று காட்சியளவில் ரசிகர்களுக்கு தெரியப்படுத்த தவறவிட்டிருக்கிறார்கள்.

 

இடையிடையே ஹீரோ கூறும் குட்டிக்கதையில் வருவதைப்போலவே ஹீரோவின் முடிவு அமைவது. ஷ்ராத்த’விடமிருந்து துவங்கும் படம், இறுதியில் அவரைவைத்தே முடிவுபெறுவது. படம் முழுவதும் 2000’தின் தொடக்கத்தில் நடப்பதை சொல்லாமல் சொன்ன விதம் என்று பல இடங்களில் இயக்குனர் கெளதம் ராமச்சந்திரனின் புத்திசாலித்தனம் தென்பட்டாலும், காட்சியமைப்பும், படமாக்களும் சரிவர உதவாததால், சோகத்துடன் காணப்படுகிறான் ரிச்சி.

 

மொத்தத்தில் : மெதுவான திரைக்கதையையும், நேர்கோட்டில் பயணிக்காத காட்சியமைப்பையும் நீங்கள் பொறுத்துக்கொண்டால், இந்த ரிச்சியை நீங்கள் ஒரு முறை பார்க்கலாம்.

 

மதிப்பீடு : 2 / 5

Santhosh AVK

Share