தெரு நாய்கள் – படம் எப்படி ?

தெரு நாய்கள் – படம் எப்படி ?

இயக்கம் : ஹரி உத்ரா

நடிப்பு : ப்ரதீக்

                 அக்ஷதா ஸ்ரீதர் 

                 அப்புகுட்டி

                 பவேல் நவநீதன்

                 ஆறு பாலா

                 இமான் அண்ணாச்சி

                 மதுசூதனன்

                 மையம் கோபி

ஒளிப்பதிவு : தளபதி ரத்தினம்

படத்தொகுப்பு : மீனாட்சி சுந்தரம்

இசை : ஹரிஷ் – சதிஷ்

தயாரிப்பு: ஸ்ரீ புவள் மோவிஸ்

                       கிரியேஷன்ஸ்

நீளம் : 102 நிமிடங்கள்

 

‘கதிரமங்கலம்’, ‘விவசாயம்’ போன்ற சமூகப்பிரச்சனைகளின் மைய்யப்புள்ளிகளை களம் கண்டு, தெருவில் இறங்கி களையறுக்கும் கணவுத்தேடலே இந்த ‘தெருநாய்கள்’.

 

கதைச்சுருக்கம் : சட்டமன்ற தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், நடப்பு சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய வேட்பாளருமான சொக்கலிங்கம், ஐந்து மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். யார் அந்த நபர்கள்? எதற்காக கடத்தப்படுகிறார் இந்த MLA? போன்றகேள்விகளுக்கு நின்று நிதானமாக பதில்சொல்கிறது திரைக்கதை.

 

கதைக்கு ஏற்றார் போல், திருவாரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நகரும் திரைக்கதையின் முதல் 40 நிமிடங்களும், கதையை விவரிக்கவே செலவாகிவிட, சீக்கிரத்தில் வந்துவிடுகிறது இடைவேளை. இடைவேளைக்குப்பின் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் நமக்கு கதையின் வலுவை உணர்த்திமுடிக்கும் சிலநிமிடங்களில் ,ஒருவித கட்டாயத்தில் முடித்து வைக்கப்படுகிறது படம்.

 

பலம் . . .

 

+ கதை :

* நம்மை உலுக்கிய பல சமீபகால நிகழ்விகளை நினைவுபடுத்தும் வகையில் உருவாகி இருக்கிறது இந்தப்படத்தின் கதை.

 

+ ஒளிப்பதிவு :

* திருவாரூர் கோவில் குளத்தை பல கோணங்களில் வர்ணித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம். நகரத்தை விவரிக்கும் பல Top-angle ஷாட்கள், நன்று.

 

பின்னணி இசை :

* கட்சிக்கு நடுவில் தென்படும் பல Lag’கலை, பின்னணி இசை மூலம் மறைக்க முயற்சித்து இருக்கிறார்கள் இசையமைப்பாளர்கள் ‘ஹரிஷ் – சதிஷ்’. காட்சிகளின் தன்மைக்கு ஏற்றார் போல் ஒலிக்கும் பின்னணி இசை பல இடங்களில் நன்று, சில இடங்களில் இரைச்சல்.

 

பலவீனம் . . .

 

திரைக்கதை :

* பல கோணங்களில் அலையும் திரைக்கதையில், காட்சிகள் கோர்வையே இல்லாமல் நகர்கின்றது. நேர்கோட்டில் சென்ற திரைக்கதையில், இடைவேளைத்திருப்பம் வீண்குழப்பம். இடைவேளைக்கு பின்னர், கதை யார் பார்வையில் நகர்கின்றது என்பதில் தெளிவில்லை.

 

காதல் காட்சிகள் :

* பட்டி கிராமத்தில் ஹீரோயின் அணிந்திருக்கும் மாடர்ன் உடையைப்போல, இந்த  திரைக்கதையில், காதல்காட்சிகள் ஒட்டவே இல்லை. படித்த பெண், படிக்காத பைய்யனை காதலிக்கும் கதையெல்லாம் 5000 காலத்து பயிர். பாடல்கள் மிகப்பெரிய வேகத்தடை.

 

-Slow Motion காட்சிகள்  :

* படம் முழுவதும் கொட்டிக்கிடக்கும் slow motion காட்சிகள் ரசிகர்களின் பொறுமையை சீண்டிப்பார்க்கிறது. முதல் 30 நிமிடம் முழுவதும் Slow Motion’னிலேயே நகர்வது கொடுமை. படத்தொகுப்பாளர் மீனாட்சி சுந்தரம், இவற்றை சிறிது நறுக்கி இருக்கலாம்.

 

அப்புகுட்டியின் கதாபாத்திரத்தில் தெளிவில்லை, அவர் சீரியசாக வரும் காட்சிகள் அனைத்தும் நமக்கு சிரிப்பையே மூட்டுகிறது. வில்லனாக வரும் மதுசூதனனுக்கு பெரிய வேலை இல்லை. நண்பர்களாக வரும் பிரதீக், பவேல் நவநீதன், ஆறு பாலா ஆகியோர் நன்று. இமான் அண்ணாச்சி முத்திரை பதிக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக மையம் கோபி, எதிர்பார்க்கவிட்டு மறைகிறார்.

 

* இறுதியில் குமார் (ப்ரதீக்) தவிர்த்து, மற்ற நால்வரின் கதி என்ன?.

* ‘ஒரு வேட்பாளர் காணாமல் போனதில் மர்மம் தென்பட்டால், அப்பகுதியின் தேர்தல் ரத்து செய்யப்படும்’, என்பதை இயக்குனர் அறிவாரா?.

* Bubble விடும் சோப்பு நுரையில் மயக்கமருந்து கலப்பது நல்ல யோசனை. ஆனால், 5 பெருமே  Frame’ல் நிற்க, அதை ஊதுவது யார்?. ஊதுபவர் மயங்கமாட்டாரா?.

 

போன்ற கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. வசனங்கள் பல இடங்களில் செயற்கையாகவே தென்படுகிறது. ஒரு நல்ல கருவை சிந்தித்த இயக்குனர் ஹரி உத்ரா, அதற்கேற்ப திரைக்கதையையும், கதாபாத்திரத்தையும் உருவாக்குவதில் தடுமாறி இருக்கிறார்.

 

மொத்தத்தில் : திரைக்கதையிலும், படமாக்களிலும் ஒரு தெளிவான அணுகுமுறை இல்லாததால், பலமான கதை இருந்தும், பலவீனமாகவே காணப்படுகிறார்கள் இந்த ‘தெரு நாய்கள்’.

RATING : 2 / 5 . . .

Share