விவேகம் (2017) படம் எப்படி ?

விவேகம் (2017) படம் எப்படி ?

இயக்கம் : சிவா
எழுத்து : சிவா
கபிலன் வைரமுத்து
ஆதி நாராயணா
நடிப்பு : அஜித் குமார்
விவேக் ஓபராய்
காஜல் அகர்வால்
அக்ஷரா ஹாசன்
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : வெற்றி
படத்தொகுப்பு : ரூபன்
கலை : மிலன்
தயாரிப்பு : சத்யஜோதி பிலிம்ஸ்
.T.G. தியாகராஜன்
கதைச்சுருக்கம் : இறந்துவிட்டார் என்று கருதப்படும் அஜய் குமார் என்னும் சர்வதேச உளவாளி, உயிருடன் மீண்டு தன் எதிரிகளை வேட்டையாடும் பழிவாங்கும் படலம். ஹாலிவுட் Bond பட பாணியில் தொடங்கும் படம், அவ்வண்ணமே இறுதி வரை சித்தரிக்கப்பட்டாலும், திரைக்கதையில் மசாலா அதிகம். முதல்பாதியில் முதல் 45 நிமிடம் வரை இருக்கும் விறுவிறுப்பு, பின்னர் காணாமல் போக, இடைவேளை வரை அங்கங்கே கொட்டாவி வர வைக்கிறது திரைக்கதை. பின்னர் வரும் இரண்டாம்பாதி, கதையை விரைந்து முடிக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறது. Climax சண்டைக்காட்சி தொடங்கி, பல காட்சிகள் அவசர அடியாகவே தென்படுகிறது. Interval காட்சி மட்டும் நன்று.

பலம் . . .

+ அஜித் : வழக்கம் போல் முழு படத்தையும் தனது தோளில் சுமந்து நிற்கிறார் அஜித். மனஉறுதியையும், உடல்வலிமையையும் வெளிக்காட்டும் அஜய் கதாபாத்திரத்தில் fit ஆக அமர்கிறார். ஆனால், வழக்கம் போல் நடிக்கும் சந்தர்ப்பம் இதில் குறைவு.

+ ஒளிப்பதிவு : ஒரு காட்சியை பல கோணங்களில் படம் பிடித்து ஆச்சரிய படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி. விவரிக்க முடியாத பல கோணங்களில் நகர்கிறது கேமரா.

+ இசை & சண்டைக்காட்சிகள் : அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் நன்று. நடு இரவில் வரும் Bike chase காட்சி அபாரம், Stunt காட்சிகள் அவ்வபோது எல்லை மீறினாலும், பெரும்பாலும் நன்று.

+ கலை : Interpol அலுவலகம், Tunnel, Safe House அரங்குகள் அனைத்தும், கலை இயக்குனர் மிலன்னின் கைவண்ணத்தில் அருமை.

 

பலவீனம் . . .

– திரைக்கதை : ஆரம்ப காட்சியில் தொடங்கி இறுதிகாட்சிவரை நீளும் Built-Up காட்சிகளுக்கு நடுவே, மானே தேனே பொன்மானே போன்று தெரிகிற திரைக்கதையும், வசனங்களும் படத்தின் முதல் பலவீனம். மேலும், இல்லுமினாட்டி, செயற்கை நிலநடுக்கம் போன்ற ஐடியாக்கள், திரைக்கதைக்கு உதவாமல், வெறும் ஐடியாக்களாகவே தேங்கி நிற்பது அடுத்த பலவீனம்.

– இரண்டாம்பாதி & Climax : அவசர அடியாக ஓடும் இரண்டாம்பாதியில் ஏகப்பட்ட cliche காட்சிகள். Climax’சில் ஹீரோயின் பாட பாட ஹீரோ வில்லனை அடிக்கும் ராமநாராயணன் காலத்து வித்தையும் உண்டு.

– வில்லன் : அஜித்தின் நண்பனாகவும் வில்லனாகவும் வரும் விவேக் ஓபராய், இறுதிவரை ஹீரோவுக்கு மட்டுமே built-up கொடுத்துவிட்டு வீழ்கிறார். அவரது கதாபாத்திரம் எந்த வித அச்சுறுத்தலையோ, அதிர்வுகளையோ ஏற்படுத்தவில்லை.

மேலும், திரைக்கதையில் வேகத்தைக்கூட்ட, படம் முழுக்க உபயோகித்திருக்கும் செயற்கை கேமரா அதிர்வுகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். கதை தற்காலத்திலிருந்து Flashback செல்லும்பொழுது வரும் Transition’னை வித்யாசமாக கையாண்டு இருக்கிறார் படத்தொகுப்பாளர் ரூபன், சண்டைக்காட்சிகளிலும் காதல்காட்சிகளிலும் இடை இடையே கதிரிபோட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. VFX, பல இடங்களில் சுமார்.

காஜல் அகர்வாலின் முதல்பாதி காட்சிகள் நன்று, இடைவேளையில் கண்கலங்க வைக்கிறார். இரண்டாம்பாதியில் செண்டிமெண்ட் காட்சிகள் சிறிது சொதப்பல். அக்ஷரா ஹாசன் எண்ணி 4 காட்சிகளில் மட்டும் தோன்றுகிறார், இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். கருணாகரன் முதல்பாதியில் தோன்றி, இடையில் காணாமல் போகிறார். வில்லன் தொடங்கி, கடை நிலை Junior Artist வரை பேசும் ஹீரோவின் புகழ்ச்சி வசனங்களுக்கு அளவே இல்லை. இடையில் தென்படும்

“நட்புல சந்தேகம் வரக்கூடாது, சந்தேகம் வந்தா அது நட்பே கிடையாது”,
“இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் ……..” போன்ற பஞ்சங்கள் நன்று.

Spy-Thriller’ருக்கு ஏற்ற Location, Dozen கணக்கில் பூ சுற்றும் technical அம்சங்கள், கற்பனைக்கு அப்பாற்பட்ட சண்டைக்காட்சிகள் போன்றவற்றில் கவனிக்க வைத்திருக்கும் இயக்குனர் #சிவா, திரைக்கதையிலும், படமாக்களிலும் அவற்றை கலந்துகொடுக்கும் விதத்தில் கோட்டை விட்டிருக்கிறார்,

– நட்டாஷாவின் காதலன் இதயத்தில் பொருத்தப்பட்ட #Pacemaker, AK’வின் கைக்கு வந்தது எப்படி?
– எப்படியும் AK ஒரு 1000 பேரையாவது கொன்று இருப்பார், அவருக்கு இவ்வளவு வெடிமருந்தும் எங்கிருந்து வந்தது?.
போன்ற Logic கேள்விகள் மனதில் உதிக்காமல் இல்லை.
மொத்தத்தில் : வழக்கமான பழிவாங்கல் கதையை, பழமைமாறாமல் கையாண்டதால், விறுவிறுப்பு குறைத்தே காணப்படுகிறது இந்த விவேகம்.
#RATING : 2.5 / 5 . . .

 

Santhosh AVK

Share