விக்ரம் வேதா (2017) – படம் எப்படி ?

விக்ரம் வேதா (2017) – படம் எப்படி ?

 

இயக்கம் : புஷ்கர் காயத்ரி

எழுத்து  : மணிகண்டன் (வசனம்)

                    புஷ்கர் காயத்ரி (திரைக்கதை)

நடிப்பு : மாதவன்

                 விஜய் சேதுபதி

                 ஷ்ரத்தா ஸ்ரீநாத்

                 வரலக்ஷ்மி

                 கதிர்

                 அட்சுயுத் குமார்

                 பிரேம், மற்றும் பலர்.

இசை  : சாம்.C.S

படத்திகுப்பு :  ரிச்சர்ட் கெவின்

ஒளிப்பதிவு :  P.S.வினோத்

தயாரிப்பு : Y Not Studios

                        S.சஷிகாந்த்

‘எது தர்மம்?’

‘எது தேவையோ அதுவே தர்மம்’.

 

கீதையின் இவ்வாக்கியத்தை விக்ரம் (மாதவன்) மற்றும் வேதா (வி.சேதுபதி) ஆகிய இரண்டு துருவங்களை வைத்து தெளிவுற, ஆழமாக சித்தரித்திருக்கும் celluloid பதிவே இப்படம்.

 

கதைச்சுருக்கம் :
18 கொலைகள் செய்த encounter specialist விக்ரம், 16 கொலைகள் செய்த ரவுடி வேதா’வின் மூன்று கதைகளுக்கு சொல்லும் முடிவும், அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களுமே படத்தின் ஒட்டுமொத்த கரு.

முதல்கதையின் முடிவு, இடைவேளையை தீர்மானிக்கிறது, இரண்டாம் கதையின் முடிவு, விக்ரமிற்கு நிஜ உலகின் உண்மையை உணர்த்துகிறது. மூன்றாம் கதையின் முடிவு, climax’சை திசை திருப்புகிறது. தவிர, climax’ல் விக்ரம், வேதாவிடம் கேட்கும் கேள்வியின் முடிவு ரசிகர்களிடம்.

 

நிறைகள் …

+ திரைக்கதை : ஒரு சாதாரண திருடன்-போலீஸ் encounter கதையைக்கூட, வைத்தக்கண் வாங்காமல் சொல்லமுடியும் என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இடத்திலேயே ஜெயித்துவிட்டது படம். ‘ஒரு கத சொல்லட்டா சார்’, என்று வேதா, விக்ரமிடம் கேட்கும் ஒவ்வொரு இடமும் மிரட்சி.

+ கதாபாத்திர வடிவமைப்பு : விக்ரம் வேதா தொடங்கி,  அணைத்து கதாபாத்திரங்களும், அதற்கான நடிகர்களின் தேர்வும் கனக்கச்சிதம்.

+ சிறந்த தொழில்நுற்பம் : Slow_Motion காட்சிகளை கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். முதல் காட்சியில் மாதவன் நடந்து வரும் ஒரே shot’டில் எடுக்கப்பட்ட இடத்தில தொடங்கி பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறார் ஒளிப்பதிவாளர் P.S.வினோத். ஒரு நிமிடம் கூட bore அடிக்காத திரைக்கதையை கச்சிதமாக நறுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின், மாதவன் நடந்தமையை நினைவுகூரும் ஒவ்வொரு இடத்திலும் மின்னுகிறார்.

+ இசை & சப்த அமைப்பு : படத்தின் theme’மை வெவ்வேறு கோணத்தில் BGM’மில் கலந்துகட்டி whistle அடிக்கவைக்கிறார் சாம்.C.S. மூன்று பாடல்களும் கேட்க இனிமை. 90’s மற்றும் 2000’s காலத்திற்கேற்ப சக்திமான், மெட்டி ஒலி பாடல்கள் ஒலிப்பது, மாதவன் கார் கதவை மூடியதும் மழை சப்தம் அடங்குவது என Sound design அட்டகாசம்.

+ வசனங்கள் : ‘சிவனுக்காக பாம்பா?, இல்ல பாம்புக்காக சிவனா’, போன்று கொட்டிக்கிடக்கும் பளீர் வசனங்கள். வாசகர்தா மணிகண்டனுனக்கு சபாஷ். தப்புசெய்ய பதறும் Virgin போலீஸாக நடிப்பிலும் மிளிர்கிறார்.

 

குறைகள் …

– லாஜிக் ஓட்டைகள் :

* சைமனை வேதா கொள்ளவில்லை என்றால், பிறகு வேதா சரணடைந்ததற்கு காரணம் என்ன?.

*புலியும் சந்திராவும் மும்பையிலிருந்து, சென்னை வந்தது எப்பொழுது?.

* சந்திரா எப்பொழுது கடத்தப்பட்டார்?. புலி இறந்தபிறகும் சந்திராவை கடத்தி வைத்திருப்பதன் காரணம் என்ன?

* வேதா தலைமறைவாக இருந்த காலமும் இடமும் மர்மமே!!…

–  கிளைமாக்ஸ் :

மாதவனும், படம் துவங்கி 30 நிமிடம் கழித்து வரும் விஜய்சேதுபதியும் நடிப்பில் மல்யுத்தம் செய்திருக்கிறார்கள். நடிப்பில் சிறிதளவும் பிசுரில்லை. போலீஸ் தலைமை அதிகாரியாக அட்சுயுத் குமார் சிறப்பு. கிட்டத்தட்ட மாதவனுக்கு நிகராக ஷர்ரத் ஸ்ரீநாத் கவனிக்கவைக்கிறார்.  கதிருக்கும், வரலட்சுமியும் இரண்டாம்பாதியின் நங்கூரம், இருப்பினும் பெரிய அளவில் திரை தோற்றம் இல்லை.

*தான் encounter செய்த ரௌடியின் மகனை home’இல் சேர்க்கும் இடத்தில் பாச முகத்தையும், climax’சில் தான் நம்பியவர்கள் முதுகில் குத்தும் இடத்தில் மிருக முகத்தையும் காட்டும் #விக்ரம்.

*தான் சம்பாதிக்க தடையாக இருப்பவர்களை கொள்ளும் இடத்தில மிருக முகத்தையும், விக்ரம்ற்கு உண்மையை உரைக்க வைத்து பின்னர் அவனுக்கு பரிசளிக்கும் இடத்தில பாச முகத்தையும் காட்டும் #வேதா.

 

இவ்விரு கதாபாத்திரங்களையும் அணுஅணுவாய் செதுக்கியமைக்கு #புஷ்கர்_காயத்ரி தம்பதியினருக்கு ஒரு பூங்கொத்து.  ஓரம்போ, வ படங்களில் இயக்குநர்களா இவர்கள்??… என்று வியக்கும் வண்ணம் செய்துவிட்டார்கள் புஸ்கரும் காயத்ரியும். வேதா கதாபாத்திரதில் சிறிது காமெடி சேர்த்து மொத்த படத்தையும் dry ஆக்காமல், ஜனரஞ்சக படைப்பாக கொடுத்தமைக்கு நன்றி. கொஞ்சம் ரத்தத்தை குறைத்து இருக்கலாம்.

 

மொத்தத்தில் : உங்களில் நேரத்தின் அவசியத்தையும், காசின் மகிமையும் மதிக்கும் ஒரு படைப்பே இந்த விக்ரம் வேதா.

 

#RATING : 3.75 / 5 . . .

Santhosh.A.V.K

Share