இங்கிலாந்தில் ப்ரத்யேகமாக திரையிடப்படும் “டிக்கெட்”

இங்கிலாந்தில் ப்ரத்யேகமாக திரையிடப்படும் “டிக்கெட்”

‘ஜோடி நம்பர்-1’, ‘மானாட மயிலாட’, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ போன்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற்றவரும், ‘எந்திரன்’, ‘நஞ்சுபுரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவருமான நடிகர் ராகவ் ரங்கநாதன் தற்போது ‘டிக்கெட்’ என்னும் படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இல்யுசன்ஸ் இன்பினிட் நிறுவனத்தின் சார்பாக ப்ரிதா தயாரித்துள்ள இந்த ‘டிக்கெட்’ படத்தில் ராகவ் ரங்கநாதன், கார்த்திக் குமார், லக்ஷ்மி பிரியா, சனம் ஷெட்டி, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தாண்டுக்கான லண்டன் இந்தியன் பிலிம் பெஸ்ட்டிவலில் திரையிட இந்த டிக்கெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக லண்டனில் உள்ள பாரம்பரியமிக்க எம்பயர் லிய்சிஸ்டர் ஸ்குயர் தியேட்டரில் ‘டிக்கெட்’ படம் பிரத்யேகமாக திரையிடப்படவுள்ளது. மேலும் கூடுதலாக பர்மிங்ஹாமிலும் இந்தப் படம் திரையிடப்படவுள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்தில் மூன்று இடங்களில் ப்ரத்யேகமாக திரையிடப்படும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை இந்த ‘டிக்கெட்’ படம் பெற்றுள்ளது.

Share