ஒரு இயக்குனரின் காதல் டைரி – படம் எப்படி ?

ஒரு இயக்குனரின் காதல் டைரி – படம் எப்படி ?

நடிகர்கள் : வேலு பிரபாகரன், பொன் ஸ்வாதி
இயக்கம் : வேலு பிரபாகரன்
இசை : இளையராஜா
தயாரிப்பு : பி. சுரேஷ் கிருஷ்ணா
ஒரு இயக்குனரின் காதல் டைரி என்று படத்தின் தலைப்பை பார்த்தாலே உங்களுக்கு புரிந்திருக்கும்.
ஆம். இது முற்றிலும் வயது வந்தவர்கள் பார்க்கக்கூடிய படம்.
பொதுவாக படங்களில் நாம் பார்க்கும் காதல் என்பது புனிதமான ஒன்றாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக காதல் என்பது காமத்தை அடையும் நுழைவாயிலாகவே பார்க்கப்படுகிறது. அதையெல்லாம் தாண்டி எப்போது காமம் என்பது அறிய ஒன்று என்ற தன்மை மாறுகிறதோ அது வரை பாலியல் சம்பந்தமான வன்முறைகள் தொடரும் என்ற கருத்தை இதிலும் வைக்கிறார். முக்கியமாக தான் சந்தித்த காதல் அனுபவங்களை, அதில் காதல் இல்லை வெறும் காமம் என்று சொல்லும் அவர் காமம் கலந்துதானே காதல் என விளக்கமும் கொடுக்கிறார்.
நம் வீட்டில் செக்ஸ் பற்றி வெளிப்படையாக ஒருமுறையாவது பேசமுடியுமா ?!? காரணம் படுக்கையறை தாண்டிவந்தால் அது ஒரு அசிங்கம் என்ற ஒரு கட்டமைப்பு… அதற்கு உதாரணமாக ஒரு 10 வயது பையன், அவனின் பெற்றோர் முத்தமிடுவதை பார்த்துவிடுகிறான். அவனின் பார்வையில் அது தவறாக தோன்றுகிறது. அதுபோல் அவனின் பெற்றோரும் குற்ற உணர்ச்சியில் அவனை பார்க்க தயங்குகின்றனர். அயல் நாடுகளில் திருமணத்தின் போது மக்கள் மத்தியில் மணமக்கள் முத்தமிட்டு கொள்கின்றனர். அங்கே அது சர்வசாதாரணமாகிவிட்டது.
oru-iyakkunarin-kathal-dairy--3
ஆனால் இங்கே பெண்களை மறைத்து மறைத்து வாழ வைக்கின்றனர். எனவே மூடி மறைக்கப்பட்ட சேலையில் சதை தெரியாதா? என ஆண்கள் ஏங்குகின்றனர். இதனால் பாலியல் பலாத்காரம் நடக்கிறது. பொத்தி பொத்தி வைப்பதால், ஆர்வம் ஆசை அதிகமாகி அந்த காமம் தலைக்கேறி விடுகிறது. ஐ லவ் யூ ன்னு ஒருத்தன் சொன்னாலே நான் உன்னுடன் உடலுறவு கொள்ள சம்மதிக்கிறேன். உனக்கு சம்மதமா? என்று அர்த்தம் என கூறுகிறார். காதல் என்பது தனியாக இல்லை. அது காமம் கலந்த கலவை என பாடமும் நடத்தியிருக்கிறார். எனவே பாலியல் மற்றும் செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு தேவை. பள்ளிகளில் செக்ஸ் விழிப்புணர்வு கல்வி வேண்டும் என சொல்லி முடிக்கிறார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகளில் வேலு பிரபாகரனே வருகிறார். நடக்கிறார், பேசுகிறார், மீண்டும் நடக்கிறார், மீண்டும் நடக்கிறார், பேசுகிறார்……etc
oru-iyakkunarin-kathal-dairy--1
ஒவ்வொரு பருவத்திற்கும் சில நாயகிகளை பயன்படுத்தியிருந்தாலும், ஸ்வாதி மட்டுமே ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.
இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு கைகொடுத்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. சாரி ராஜா சார்.
மொத்தத்தில் “ஒரு இயக்குனரின் காதல் டைரி”  – BALL IS IN YOUR COURT…
Share