எய்தவன் – படம் எப்படி?

எய்தவன் – படம் எப்படி?

நடிகர்கள் : கலையரசன், சாத்னா டைட்டஸ்
கதை,திரைக்கதை, இயக்கம் : சக்தி ராஜசேகரன்
வசனம் : சக்தி ராஜசேகரன், சதீஷ் சௌந்தர்
தயாரிப்பு : எஸ். சுதாகரன்
தயாரிப்பு நிறுவனம் : பிரண்ட்ஸ் பெஸ்டிவல் பிலிம்ஸ்
படவிநியோகம் : சக்திவேலன்
விநியோக நிறுவனம் : சக்திவேல் பிலிம் பாக்டரி
இசை : பார்தவ் பார்க்கோ
ஒளிப்பதிவு : சி. பிரேம்குமார்
படத்தொகுப்பு : ஐ. ஜே. ஆலன்.
கலை : எம். லக்ஷ்மி தேவ்
ஸ்டண்ட் : ராக் பிரபு
வெளியீட்டு நாள் : 12.05.2017
தணிக்கை சான்றிதழ் : யூ
காலஅளவு : 2 மணி 12 நிமிடங்கள்
படவகை : ஆக்ஷன் திரில்லர்

 

கதை :
ரூபாய் நோட்டுக்களை எண்ணும் மிஷினை சப்ளை செய்யும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் கலையரசன். அவர் தங்கைக்கு டாக்டர் ஆகவேண்டும் என்பது லட்சியம். எனவே பாசமுள்ள பொறுப்பான அண்ணனான நாயகன் கஷ்டப்பட்டு தன் தங்கையை ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்க்கிறார்.  கல்லூரியில் சேர்ந்த தங்கைக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது, அதை கதாநாயகன் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே மீதி கதையோட்டம்.

 

நிறை :
இயக்குனர் சக்தி ராஜசேகரன் கதையின் முன்பாதியில் தனியார் மருத்துவக்கல்லூரியின் அட்டூழியங்களை அப்பட்டமாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததை பாரட்டியாகவேண்டும். ஆரம்பத்தில் திரைக்கதை தொய்வில்லாமல் விறுவிறுப்பாய் செல்கிறது. கலையரசனின் நடிப்பில் முந்தைய படங்களைக்காட்டிலும் முதிர்ச்சி தெரிகிறது. கதாநாயகி சாத்னா டைட்டஸ் வழக்கமான வேடத்தை விட்டு போலீஸ் அதிகாரியாக நன்றாகவே நடித்திருக்கிறார். சோகமான நேரத்தில் குடும்ப உணர்வுப்பூர்வமான காட்சிகள் நன்றாக கை கொடுத்திருக்கிறது. சில இணையான சம்பவங்கள் படத்தை முன்நகர்த்திச் செல்வது சுவாரஸ்யமாக இருக்கிறது. திருப்பத்துடன் கூடிய இடைவேளை, இரண்டாம் பாதி படத்தின் எதிர்பார்ப்பை தூண்டுகிறது. ஒரு அட்டகாசமான காட்சி மிக நன்றாக இருக்கிறது.

 

குறை :
கதை திருப்தி அளித்தாலும், சமீபத்தில் வெளிவந்த விஜய் படத்தை ஞாபகப்படுத்துகிறது. பல காட்சிகளில் சக்தி ராஜசேகரனின் இயக்கத்தில் முதிர்ச்சியின்மை தெரிகிறது. இடைவேளைக்குப்பிறகு கதையோட்டத்தில் சலிப்பு ஏற்ப்பட்டு தொய்வடைகிறது. கதாநாயகன், நாயகியைத்தவிர வேறு எந்த கதாபாத்திரங்களும் எந்த தாக்கத்தையும் உண்டாக்கவில்லை. பல காட்சிகள் லாஜிக் மீறல் மற்றும் சில காரணங்களால் ரசிக்கும்படி இல்லை. மாணவர்களின் போராட்டம் பழையதாகவும் சுவாரஸ்யமின்றியும் இருப்பது படத்தை வறட்சியாக்குகிறது. செயற்கையான வசனங்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. பலவீனமான வில்லன் கதாபாத்திரத்தின் செயற்கையான நடிப்பும் படத்திற்கு கெட்டதாக அமைகிறது. பார்தவ் பார்க்கோ-வின் பாடல்களும் படத்தில் அவை அமைந்த இடமும் பொருந்தாமல் மந்தமாகிறது. பின்னணி இசையும் உரத்து இருப்பதால் காதுவலிக்கு வழிவகுக்கிறது. சி. பிரேம்குமாரின் ஒளிப்பதிவு புதுமைகளின்றி வழக்கம் போலதான். படத்தொகுப்பிலும் எந்த நூதனமும், சோதனை முயற்சியாக எதையும் வெட்டிப்பர்க்கவும் இல்லை. லக்ஷ்மி தேவின் கலை இயக்கமும் சராசரி தான். சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவை காட்சிகள் வெறும் இடைச்செருகலாகவே தோன்றுகிறது.

 

மதிப்பீடு : 2.5 / 5

Share