எனக்கு வாய்த்த அடிமைகள் – படம் எப்படி?

எனக்கு வாய்த்த அடிமைகள் – படம் எப்படி?

காதல் பெரிய ஈடுபாடு இல்லாத ஐ.டி. இளைஞர் ஜெய் அவருடன் பணிபுரியும்பி ரணிதா இருவரும் நண்பர்களுடன் கொடைக்கானல் பயணத்தில் அத்துமீறி காதலிக்கிறார்கள். அதாவது ஜெய்யின் பாஷையில் ”கிஸ்கா” (கசமுசா). பின், சென்னை திரும்பியதும் புதிய வேலைக்கு போகும் பிரணிதா, ஜெய்யை கழற்றிவிட்டி வேறு ஒருவனை காதலிக்கிறார். இதனால் மனமுடைந்த ஜெய் தற்கொலை செய்வதாக அவரின் நெருங்கிய நண்பர்களான, கருணாகரன், காளி வெங்கட், நவீன் மூன்று பேருக்கும் சொல்ல அவர்கள் கலாய்க்க அட்செட்டான ஜெய் தற்கொலை முயற்சி செய்கிறார். பிறகு புரிந்துகொண்டு ஜெய்யை தேட ஆரம்பிக்கிறார்கள்.

இறுதியில் ஜெய் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை அவரது நண்பர்களால் காப்பாற்றப்பட்டாரா? காதலில் ஜெயித்தாரா என பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது எனக்கு வாய்த்த அடிமைகள்.

சேதுபதி படத்தை தயாரித்த வாசன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்துள்ள படம் “எனக்கு வாய்த்த அடிமைகள்”. நந்தா பெரியசாமியின் உதவியாளர் மகேந்திரன் ராஜாமணி இயக்கியுள்ளார்.

காதல், தற்கொலை என மிகவும் சீரியஸான இந்த கதைக்களத்தை கருணாகரன், காளி வெங்கட், நவீன், தம்பி ராமைய்யா, மொட்டை ராஜேந்திரன் என அனைவரும் சேர்ந்து ஜாலியான படமாக மாற்றிவிடுகின்றனர். ஹீரோயின் கேரக்டருக்கு கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் இருக்கிறது. இதனால் பலர் நடிக்க தயங்கிய கேரக்டரில் பிரணிதா தைரியமாக நடித்ததுள்ளார். பாராட்டுக்கள். அழகும், திறமையும் இருந்தும் இன்னும் கவனிக்கப்படாத நடிகை. அவருக்கு இந்தப் படம் நிச்சயம் நல்ல திருப்பம் தரும்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு ஓக்கே. கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பில் இரண்டாம் பாதியில் கொஞ்சம் பின் வாங்கியிருக்கிறார். சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசையில் கலக்கியுள்ளார்.

மொத்தத்தில் காதல் படம் என்றாலே அழுதுகொண்டே பார்க்கும் ரசிகர்களுக்கு இது ஒரு ஜாலி படமாக இருக்கும்.

Share