ஜல்லிக்கட்டிற்காக ஜனவரி 20ம் மாநிலம் தழுவிய போராட்டம்…

ஜல்லிக்கட்டிற்காக ஜனவரி 20ம் மாநிலம் தழுவிய போராட்டம்…

தமிழகத்தையே பதைபதைத்துக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு பிரச்சினை மேலும், மேலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவில் தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்களிலும் நடுத்தெருவுக்கு வந்து போரட்டங்களை நடத்துகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு பிரச்சினை தமிழகத்தின் கலாச்சாரப் பண்பாட்டு பிரச்சினை என்பதால் இது நமது ஊனோடு கலந்தது என்கிற உணர்வோடு இன்றைய இளைய தலைமுறையினர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழக அரசு நேற்று இரவு நடத்தி அமைதிப் பேச்சுவார்த்தை பலனிக்காமல் போனது. கோர்ட்டில் வழக்கு இருப்பதால் ஒன்றும் செய்ய இயலாது என்று மத்திய அரசும் கைவிரித்த நிலையில் நாளைய தினம் தமிழகம் முழுவதும் அமைதியான வழியில் பந்த் நடத்துவதாக அனைத்து மாணவர் அமைப்புகளும் அறிவித்துள்ளன.

தமிழ்நாடு வணிகர்கள் சங்கத் தலைவர் வெள்ளையன் மாணவர்கள் நடத்தும் இந்த போரட்டத்தில் வணிகர்களும் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்துள்ளார். இதனால் தமிழ்நாடு முழுவதும் கடைகள்  அடைக்கப்பட்டிருக்கும்.

லாரி உரிமையாளர் சங்கத்தினரும் இந்த போராட்டத்திற்க்கு ஆதரவு அளித்துள்ளனர்.

தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பகலில் நடைபெறும் இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகத்தினரும் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதன்படி சின்னத்திரை, பெரிய திரைகளின் படப்பிடிப்புகள் எதுவும் நாளை நடத்தப்பட மாட்டாது என்று பெப்ஸி அமைப்பு அறிவித்துள்ளது.

Share