‘ரெமோ’ – படம் எப்படி?

‘ரெமோ’ – படம் எப்படி?

சினிமாவில் நடித்து, சூப்பர் ஸ்டார் ரஜினியை போல வரவேண்டும் என சிவகார்த்திகேயன் சான்ஸ் தேடி அலைகிறார். கீர்த்திசுரேஷ் மீது பார்த்ததும் காதல் விழ பின் தொடர்கிறார். நிச்சயமானது தெரிந்ததும் விலகுகிறார். வாய்ப்புக்காக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை சந்திக்கிறார். ஆனால், அவரின் கதைப்படி பெண் வேடமிட ஒரு ஹீரோ தைரியமாக வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்.

அதற்காக துணியும் சிகா, பெண் வேடமிட்டு கேஎஸ்ஆரை கவர நினைக்கிறார். இந்த சூழ்நிலையில் பெண் வேடத்தில் இருக்குபோது இவர், கீர்த்தி சுரேஷை சந்திக்க அப்போது எஸ்கே பெண் என்று நினைத்து கீர்த்தி இவரிடம் நெருங்கி பழகிறார். இதை சாக்காக வைத்து தன் லவ் ட்ராக்கை போடத்தொடங்குகிறார் லேடி சிகா…

இறுதியில் காதல் கைகூடியதா, பெரிய நடிகர் ஆனாரா என்பதே இந்த ரெமோ.

படத்தின் நாயகன்-நாயகி எல்லாம் சிகா.தான். அதிலும் ரெஜினா மோத்வானி (ரெமோ) ஆக வரும் காட்சிகளில் டபுள் சென்சுரி அடிக்கிறார். நிச்சயம் இதற்கு ஒரு கெத்து வேண்டும். ஆணழகன் படத்தில் பிரசாந்துக்கு பொருந்திய பெண் வேஷம் போன்று சிவகார்த்திகேயனுக்கு அப்படி ஒரு பொருத்தம். லேடி கெட்டப்பில் வரும் பைட் செம. நடிப்பிலும் சரி, டான்ஸ், ஃபைட் என மற்ற ஏரியாக்களிலும் சரி ஒரு ஹீரோவாக அடுத்தடுத்த படத்தில் விறுவிறு வளர்ச்சியை எட்டி வருகிறார். எதிரிகளை அடித்து விட்டு விழுந்த முடியை ஊதிவிடும் காட்சியில் ரசிகர்களின் கைத்தட்டல் ஆரவாரம்.

கதாநாயகியாக குறை வைக்காமல் ஸ்கோர் செய்கிறார் கீர்த்தி சுரேஷ். சிகா பெண்ணாக இருக்கும்போதும், ஆணாக வரும்போதும் அது என்னமோ கீர்த்தியிடம் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி.

சதீஷின் ஒன் லைன் காமெடி வரிகள் ரெமோவுக்கு கைகொடுத்திருக்கிறது. இவருடன் மொட்டை ராஜேந்திரனும் சேர்ந்து நம்மை ரசிக்க வைக்கிறார். சில நேரமே வந்தாலும் என் காமெடி சோடை போகாது என்கிறார் யோகி பாபு. வழக்கம்போல் லவ்வுக்கு கீரின் சிக்னல் காட்டும் சினிமா அம்மாவாக சரண்யா பொன்வண்ணன்.

பி.சி. ஸ்ரீராமின் கேமரா கண்களில் இன்னும் அழகாய் தெரிகிறார் கீர்த்தி. இப்படத்தை முழுமையாக ரசிக்க வைக்க முழுக்காரணமே பி.சி. ஸ்ரீராம்தான். அவ்வளவு அழகாக ஒவ்வொரு ப்ரேமையும் பார்க்க வைக்கிறார்.

இத்தனை நாட்களாக பாடல்களில் கவனம் செலுத்திய அனிருத், இப்படம் மூலம் பின்னணி இசையில் முன்னணிக்கு வருகிறார். கலை இயக்குனர் முத்துராஜின் கைவண்ணத்தின் மருத்துவமனை, வீடு, சூட்டிங் லொக்கேஷன் அனைத்தும் ரசிக்கும் ரகமே. ரெமோ என்ற நர்ஸாகவே சிகாவை மாற்றியிருக்கும் வீடா (Weta) மேக்கப் குழுவினருக்கு பெரும் பாராட்டுகள்.

படத்தில் வலுவான வில்லன் இல்லை, திருமணம் ஆகப்போகும் பெண்ணை நாயகன் காதலிக்கும்போது அவளுக்கு நிச்சியிக்கப்பட்ட ஆணைக் கொடியவனாகக் காண்பிக்கும் தமிழ் சினிமா ஃபார்முலா இதிலும் பின்பற்றப்படுகிறது.

மொத்தத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் நகைச்சுவை, பி.சி.ஸ்ரீராம், ஒளிப்பதிவு, ஃபீல்குட் தன்மை ஆகியவற்றுக்காக ‘ரெமோ’ படத்தை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

watch our youtube videos:

Share