Villathi Villain Veerapan – Press Meet stills| Ram Gopal Varma

Villathi Villain Veerapan – Press Meet stills| Ram Gopal Varma

1998 இல் ”ஜங்கிள் “படத்திற்காக ராம் கோபால் வர்மா முதுமலையில் ஷூட்டிங் செய்துகொண்டிருக்கும் போது வீரப்பனை பற்றின விபரங்கள் தெரிந்திருக்கிறது, ஒரு சாதாரண மனிதன் ஒரு சிறு படையை வெத்துக்கொண்டு காட்டிற்குள் ஒரு ராஜ்ஜியம் அமைப்பதும், இரண்டு மாநில காவல்துறையிடமும் சிக்காமல் தண்ணி காண்பித்ததும் அவரை வியக்க வைத்திருக்கின்றன. அதன் பின்னர் அவரைப்பற்றிய விபரங்களை சேகரித்து வீரப்பன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

வீரப்பன் படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீடு, மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ”வீரப்பன் பப்ளிசிட்டிக்காக அலைபவர்” என்று கூறியிருப்பதும், படத்தில் அவர் தன் சொந்த மகளையே கொன்றதாக சொல்லியிருப்பதும் பத்திரிக்கையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதன் அடிப்படையில் என்று கேட்கையில் என்னிடம் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் தான் இதை எடுத்தேன் என்று சொல்கிறார்.

தமிழில் படம் எடுக்காதது பற்றி பத்திரிக்கையாளரிடம் “எனக்கு தெரியாத மொழியில் என்னால் எப்படி படம் எடுக்க முடியும்” என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு தெரியாத மொழியில் படம் எடுக்க முடியாது என்றால் அவருக்கு முழுமையாக தெரியாத ஒருவரை வைத்து எப்படி படம் எடுக்க முடியும்.

 

Share