‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மராத்தி நடிகை அறிமுகமாகிறார்

‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மராத்தி நடிகை அறிமுகமாகிறார்

தமிழ் படங்களுக்கு மராத்தி சினிமா நிறையவே திறமையாளர்களை தந்து இருக்கிறது. மராத்தி நாடகங்களில் நடித்து, தமிழ் திரை உலகில் கால் பதிக்க வருகிறார் புது முக நாயகி வைபவி ஷண்டிலியா. கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பில் புதிய இயக்குனர் பால்கி இயக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார் வைபவி ஷண்டியலா.

‘வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக பெருமை அடைகிறோம். மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் கதாநாயகி தேடி வந்தோம். இந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது என்பதை நாங்கள் புரிந்துக் கொண்டோம். அவர் பரதத்திலும், கதக் நடனத்திலும் தேர்ந்தவர். அழகும், திறமையும் ஒருங்கிணைந்து இருக்கும் பதுமையான வைபவி ஷண்டிலியா தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் கவர்வார்’ என்று தெரிவித்தார் இயக்குனர் பால்கி.

VaibhaviShandilya-1

Share