‘பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்’ குறும்படம்

‘பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்’ குறும்படம்

இயக்குனர் கேபிள் சங்கரிடம் தினமும் குறும்படங்களை தந்து கருத்து கேட்கும் இளைஞர் பட்டாளம் ஏராளம். இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக தனது YouTube சேனலில் மிகச்சிறந்த குறும்படங்களை பதிவேற்றி வருகிறார். அதன் வரிசையில் புஷ்பநாதன் எழுதி, இயக்கிய ‘பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்’ என்ற குறும்படத்தினை பதிவேற்றிள்ளார்.

‘பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்’ குடியால் அனாதை ஆக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் மூலம் இந்த சமூகம் எவ்வளவு சீரழிந்து வருகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இந்த குறும்படம்.

பார்க்க:

படத்தின் மிகப்பெரிய பலமே அக்காவாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு. ஒரு குடிகாரனின் முகபாவங்கள் எப்படி இருக்கும் என்பதை தெள்ள தெளிவாக தனது நடிப்பில் காட்டியிருக்கார். குழந்தைகளிடம் வேலை வாங்குவது என்பது சாதாரண விசயமில்லை படப்பிடிப்பு குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

குறும்படங்கள் என்றால் இன்றைய காலக்கட்டத்தில் 10நிமிடத்திற்கு மேல் எடுத்து நம்மை சோதனை செய்கிறார்கள், இந்த படம் சரியாக 5நிமிடத்துக்குள் முடிந்துவிடுகிறது. குறும்பட இயக்குனர்கள் நினைவில் கொண்ட விடயமிது.

Subtitle Arial Font ல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது மட்டும் இல்லாமல் வீடியோவிலேயே பிரிண்ட் செய்துவிட்டனர். sub வேண்டாம் என்றால் நீக்க முடியாது போய்விடுகிறது.

Share