உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வேகமாக வளரும் உதயநிதி ஸ்டாலினின் ‘மனிதன்’

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வேகமாக வளரும் உதயநிதி ஸ்டாலினின் ‘மனிதன்’

“என்றென்றும் புன்னகை” வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் I.அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் புதிய திரைப்படம் “மனிதன்”. “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இத்திரைப்படத்தில் “ஒரு கல் ஒரு கண்ணாடி” வெற்றியை தொடர்ந்து ஹன்சிகா மோத்வாணியுடன் இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேருகிறார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் இயக்குநர் அஹமத்துடன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக கை கோர்த்து, அருமையான நான்கு பாடல்களை அமைத்துக் கொடுத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை மதி கையாள்கிறார். படத்தின் கலை இயக்குநர் செல்வகுமார் மற்றும் எடிட்டிங் மணிகண்ட பாலாஜி.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமுக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ளது மனிதன் திரைப்படம். படத்தின் பாதி நீதிமன்றத்தை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான முறையில் நீதிமன்ற வளாகமும், சென்னையிலுள்ள மண்ணடி தெருவை பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்ட தெருவும், அதில் தினமும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களையும், முன்னணி நடிகர்கள், நடிகைகளையும் கையால்வது பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும் திரைப்படத்தின் இறுதி வடிவத்தை பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது என்று இயக்குநர் அஹமத் கூறியுள்ளார்.

முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, காரைக்குடியில் நடைபெற்றது. இறுதிக்கட்டப் படபிடிப்பு சென்னை, சாலக்குடி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

Share