சென்னை டென்னிஸ் அணியை தொடங்கினார் நடிகர் பிரபுதேவா

சென்னை டென்னிஸ் அணியை தொடங்கினார் நடிகர் பிரபுதேவா

IPL, CCL, போன்று டென்னிஸ்க்கு என கடந்த வருடம் தொடங்கிய சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் போட்டிகளில் விளையாட சென்னைக்கு என ஒரு அணி தொடங்க திட்டமிடப்பட்டது. அதன்படி ‘வி சென்னை வாரியர்ஸ்’ என்று சென்னை அணிக்கு பெயர் சூட்டப்பட்டு அதன் அறிமுக விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் இந்த போட்டியின் நிறுவனர் விஜய் அமிர்தராஜ், வி சென்னை வாரியர்ஸ் உரிமையாளர் ஐசரி கணேஷ், இணை உரிமையாளர் பிரபுதேவா மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் கழக தலைவர் அழகப்பன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வி சென்னை வாரியர்ஸ் என தொடங்கும் தீம் பாடலுக்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார், பாடலுக்கு பிரபுதேவா நடனமாடியுள்ளார். இம்மாதம் லீக் போட்டிகள் ஆரம்பமாகின்றது.

Share