கமல் ஹாசன் – 60

கமல் ஹாசன் – 60

1 முதல் படம் ‘களத்தூர் கண்ணம்மா’
2 முதல் படம் வெளியான ஆண்டு 12-08-1960
3 சிவாஜியுடன் நடித்த முதல் படம் ‘பார்த்தால் பசி தீரும்’
4 எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் ‘ஆனந்த ஜோதி’
5 ஜெயலலிதாவுடன் முதல் படம் ‘உன்னை சுற்றி உலகம்’
6 முதல் மலையாளப் படம் (குழந்தை நட்சத்திரமாக) – ‘கண்ணும் கரளும்’
7 முதல் ஹிந்திப்படம் ‘ஏக் துஜே கேலியே’
8 முதல் வங்க மொழிப் படம் ‘கபிதா’
9 முதல் கன்னடப் படம் ‘கோகிலா’
10 முதல் தெலுங்குப் படம் ‘பொன்னி’
11 கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘பட்டாம்பூச்சி’
12 முதல் இரட்டை வேடம் (குழந்தை நட்சத்திரமாக) ‘பார்த்தால் பசி தீரும்’
13 முதல் இரட்டை வேடம் (கதாநாயகனாக) ‘சட்டம் என் கையில்’
14 மூன்று வேடங்களில் நடித்த படம் ‘அபூர்வ சகோதரர்கள்’
15 நான்கு வேடங்களில் நடித்த படம் ‘மைக்கேல், மதன, காமராஜன்’
16 பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் படம் ‘அரங்கேற்றறம்’
17 பாரதிராஜா இயக்கத்தில் முதல் படம் ‘பதினாறு வயதினிலே’
18 வில்லனாக நடித்த முதல் படம் ‘சொல்லத் தான் நினைக்கிறேன்’
19 மங்கம்மா சபதம் படத்திற்காகத் தான் முதல் முறையாக தமிழில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது.
20 மொரீஷீயஸ் திரைப்பட விழாவில் நுழைந்த படம் ‘வறுமையின் நிறம் சிவப்பு’
21 இந்தியாவிலேயே கண்தானம் செய்த முதல் நடிகர் கமல்ஹாசன்
22 ஈழத் தமிழராக இலங்கைத் தமிழ் பேசி நடித்த முதல் படம் ‘தெனாலி’
23 சென்னைத் தமிழை பேசி நடித்தப் படம் ‘சவால்’
24 கமலின் 100வது படம் ‘ராஜ பார்வை’
25 கமல் தாயாரித்த முதல் படம் ‘ராஜ பார்வை’
26 ராஜ பார்வை திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்களித்தது
27 ரஜினியுடன் நடித்த முதல் படம் ‘அபூர்வ ராகங்கள்’
28 அபூர்வ ராகங்கள் படத்திற்காக முறைப்படி மிருதங்கம் கற்றுக் கொண்டார்
29 பாலமுரளி கிருஷ்ணா உதவியுடன் முறைப்படி சங்கீதம் பயின்றவர்
30 சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிற்கே செலவு செய்யும் ஒரே நடிகர்
31 இந்தியன் படத்தில் ஐந்து மணி நேரம் மேக்கப் போடப்பட்டது
32 முத்தக்காட்சிகளில் அதிகம் நடித்தவர் கமல் ஒருவரே
33 முதன் முதலில் முத்தக்காட்சி நடித்தப் படம் சட்டம் என் கையில்
34 ஆசியாவிலேயே மோஷன் கிராபிக்ஸ் என்ற நவீன கேமராவில் சண்டைக் காட்சி எடுத்தப் படம் ஆளவந்தான்
35 மாஸ்டர் கமல்ஹாசனாக கண்ணும் கரளும் படத்திலிருந்து சாணக்யன் வரை கமல் 35 மலையாளப் படம் நடித்துள்ளார்.
36 கமல் எந்த மொழியில் நடித்தாலும் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார்.
37 பார்த்தால் பசி தீரும் முதல் ஆளவந்தான் வரை இரட்டை வேடம் 21 படங்கள்.
38 இந்திய திரையுலக சரித்திரத்திலே 610 பிரிண்ட் போடப்பட்ட முதல் படம் ஆளவந்தான்.
39 கமல் 99 வயது கிழவனாக முற்றிலும் மாறுப்பட்ட ஒப்பனையில் வந்து பிரமிக்க வைத்தப் படம் ஹேராம்.
40 இந்தியாவிலேயே மூன்று பேர் தேசிய விருது பெற்ற குடும்பம் கமல் குடும்பம், கமல்ஹாசன், சாருஹாசன், சுஹாசினி
41 ஆளவந்தான் படத்தில் கார் சேஸிங் ஒன்றில், கார் ரவுண்ட் அடிப்பதையும் ஜம்பிங் பாய்ந்து போவதையும் டூப் இல்லாமல் செய்தவர் கமல்.
42 ஹேராம் படத்தில் 1927ல் மாடல் பியட் கார் இடம் பெற்றுள்ளது. இந்த கார் கட்ச் மகாராஜா பயன்படுத்தியது.
43 ஹேராம் படத்தில் ராம் ராம்….என்ற பாடலை கமல்ஹாசனின் மகள் சுருதியும், கமல்ஹாசனும் இணைந்து பாடியுள்ளனர்.
44 பேசாத படம் ‘பேசும் படத்தில்’ நடித்த முதல் நடிகர்.
45 கலைமாமணி விருதை டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
46 கலைஞரிடம் கலைஞானி பட்டத்தையும் பெற்றவர்.
47 ‘ராஜ பார்வை’ படத்தின் போது இளைய வள்ளல் என்ற பட்டத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
48 நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்களின் எண்ணிக்கை126
49 ஒரே ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 18 (1977)
50 ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட படம் பேசும் படம்.
51 ராஜ் கமல் தயாரிப்பில் 14 படங்கள்
52 இயக்கியப் படங்கள் இரண்டு
53 ஆஸ்கார் சாதனை ஏழுப் படங்கள், ஆஸ்கார் நுழைவு வாயில் வரை சென்றன.
54 சிறந்த படங்கள் (தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டவை) வறுமை நிறம் சிவப்பு, 16 வயதினிலே, இந்தியன்,
55 தமிழக அரசின்க சிறந்த நடிகருக்கான விருது 6 முறை பெற்றவர்.
56 தமிழக முதல்வர்கள் இராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்.ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர்.
57 சிறந்த நடிகருக்கான தேசிய விருது மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் போன்ற படத்திற்காக கிடைத்தது.
58 ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றி தாமே தலைவராக இருந்து வழி நடத்தும் ஒரே நடிகர்.
59 நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரையும் இரத்த தானம் செய்ய வைத்த ஒரே நடிகர்.
60 தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் இலக்கிய விருது வழங்கும் ஒரே நடிகர்.

Share