சர்வதேச படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா

சர்வதேச படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ‘Woolfell’ என்ற அனிமேஷன் படம் மூலம் சர்வதேச அரங்கில் தடம் பதிக்கிறார். பிரபாகரன் ஹரிஹரன் என்ற புதிய இயக்குனரின் தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவாகும் ‘woolfell’ இந்திய தொழில்நுட்பக் கலைஞர்களை உலக அரங்கில் அறிமுகம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. அறிமுக இயக்குனர் பிரபாகரன் ஹரிஹரன் மறைந்த நடிகர் எம் ஆர் ஆர் வாசுவின் பேரன் என்பதும், அவர் சர்வதேச அளவில் சினிமா துறையிலான மேற்படிப்பு முடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி நிர்வாக இயக்குனராக பணியாற்றிய திவ்யா வேணுகோபால் இந்தப் படத்தின் கதாசிரியர் ஆகிறார். தேசிய விருதுப் பெற்ற கே எல் பிரவீன் ‘woolfell’ படத்தின் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். விஸ்வரூபம், உத்தமவில்லன் மற்றும் ‘whiplash’ ஆங்கில படத்தில் சிறப்பு ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றிய குனால் ராஜன் இந்தப் படத்திலும் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

2final
‘Woolfell’ படத்தின் போஸ்டர் நேற்று இணையதளத்தின் மூலம் வெளி ஆகி படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை தூண்டியது. வெகு விரைவில் பல்வேறு சர்வதேச நட்சத்திரங்களுடன், நமது நடிகர்களும் நடிக்க உள்ள ‘woolfell ‘ படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளது.

Share