SHAMITABH it is Ecstasy (FDFS @ Chennai)

SHAMITABH it is Ecstasy (FDFS @ Chennai)

ஷமிதாப் இது படம் அல்ல பரவசம்

நாசிக் நகரத்திருந்து வரும் வாய் பேச இயலாத தானீஷ் (தனுஷ்) அவரது அம்மாவின் இறப்புக்கு பிறகு மும்பைக்கு குடியேறுகிறான். அவனிடமிருக்கு நடிப்பு திறமையை கண்ட உதவி இயக்குனர் அக்ஷரா (அக்ஷரா ஹாசன்) அவனுக்கு தனது தந்தையின் நண்பர் மூலம் வாய் பேச இயலாத தானீசை பேச செய்கிறாள். அது எப்படின்னா தானீஷ்ன் குரல்வளையில் ஒரு கருவியினை பொருத்தி இன்னொருவர் பேசுவதினால் காதில் உள்ள ஹியர் போனுக்கு வரும் அதிர்வலைகளை உள்வாங்கி வாயசைத்தால் உண்மையாகவே பேசுவது போன்று இருக்கும்.

(நாடோடிகள் படத்தில் நடிகை அபினயா நடிக்க இன்னொருவர் குரல் கொடுத்திருப்பார் நாம் பார்க்கும் போது அபினயாவே பேசியது போலிருக்கும். இந்த படத்தில் ஹீரோவுக்கு ஒரு கருவியை குரல் வளையில் பொருத்திருக்கிறார்கள்.)

இப்ப அந்த கருவியை தானீஷ்க்கு பொருத்துகிறார்கள், அவனுக்கு குரல் கொடுக்க வருபவர் தான் அமிதாப் சின்ஹா (சூப்பர்ஸ்டார் அமிதாப் பாச்சன்). இருவரது பெயரில் இருந்து முதல் வார்த்தையை எடுத்து உருவாகிறான் ஷமிதாப். அதிரடியாக வெற்றிகளை குவித்து ஷமிதாப் முதல் வரிசை நடிகனாகிறான். தானீஷின் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக அமிதாப்புக்குள் பொறாமை தீயை வளர்க்கிறது. ஒரு கட்டத்தில் தன்னால் தான் இவ்வளவு தூரம் தானீஷ் உயர்ந்தான் என்ற கர்வம் தலைதூக்க தானீஷ் அமிதாப் பிரிகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்தால் தான் வெற்றிபெற இயலும் என்பதை உணர்த்திய அக்ஷரா இவர்கள் இருவரையும் ஒன்று சேர்க்க, வருகிறது ஒரு ரிப்போர்டர் ரூபத்தில் வில்லன், ரசிகர்களை இவர்கள் இருவரும் சேர்ந்து ஏமாற்றுகிறார்கள் என தெரிந்து கொண்ட அந்த ரிப்போர்டர் இந்த உண்மையை வெளியிட எத்தனிக்கிறான். தானீஷ் மற்றும் அமிதாப் இந்த இக்கட்டான நிலைமையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் க்ளைமாக்ஸ்.

சீனிகம், பா படங்களை தொடர்ந்து பால்கி இயக்கிருக்கும் இந்த படத்தில் அதே வெற்றி கூட்டணியான பால்கி, அமிதாப், இளையராஜா, P.C.ஸ்ரீராம் இந்த படத்திலும் கைகோர்த்து இந்தியாவின் தலை சிறந்த கலைஞர்கள் என்பதை நிறுபித்திருக்கிறார்கள்.

தனுஷ் தொடர்ச்சியாக பல இந்தி படங்கள் வந்தாலும், தனது நடிப்புக்கு சவால் விடும் கதாப்பாத்திரத்தில் தான் நடிப்பேன் என பிடிவாதமாக மறுத்து வந்தார். அது வீண்போகவில்லை தனுஷ்ன் நடிப்பு அவ்வளவு கட்சிதமாக இருக்கிறது. இந்தியிலும் சிறந்த நடிகன் நான் என வெற்றி கொடி நாட்டியிருக்கிறார் தனுஷ். கண்டிப்பாக இந்த படத்தில் நடித்தற்காக உங்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது நிச்சயம் தனுஷ்.

அக்ஷரா கமல் ஹாசன் – ம்… மீன் குச்சு நல்ல நீந்துப்பான்னு சொன்னா அது எவ்வளவு மடத்தனம் அது மாதிரி தான் அக்ஷரா நல்லா நடிச்சிருக்காங்கன்னு சொல்றதும். அப்பா கமல் உலகநாயகன், அம்மா சரிகா மிகச்சிறந்த நடிகை, அக்கா ஸ்ருதி தென்னிந்தியா இளைஞர்களின் நாடி துடிப்பு, நீங்களும் இப்ப அரிதாரத்த பூசியிருக்கிங்க வாங்க உங்களுக்கும் இந்த சினிமாவில் பெரிய இடம் இருக்கு.

இன்னைக்கு நாங்க தியேட்டரில் இந்த படம் பார்த்துட்டு வெளியே வருகின்ற ரசிகர்களிடம் மைக்கை நீட்டினால் அனைவரும் அமைதியாகவே இருக்கமான முகத்தோடு சென்றார்கள். என்ன இவங்களுக்கு படம் பிடிக்கலையா என்ன காரணமாக இருக்கும் என்று ஒரு ரசிகரை நிறுத்தி கேட்டால், ‘போப்பா மனசுக்கு ரொம்ப கஷ்டம்மா இருக்குதுப்பா, க்ளைமாக்ஸ்ல் தேம்பி தேம்பி அலுதேம்பா’, எப்படி சொல்றதுனே தெரியலை’. என்றார் அவர் எங்களுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் அனைத்து ரசிகர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இந்திய திரையுலகின் ஜாம்புவான்கள் இணைந்து நடித்த ஷமிதாப் படத்தை விமர்சனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஷமிதாப் திரைப்படம் படம் பார்ப்பது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் அதை தியேட்டரில் போய் அனுபவிங்க.

Watch our Exclusive youtube video of SHAMITABH First-day First-show

SHAMITABH it is Ecstasy (FDFS @ Chennai)
Shamitabh Hindi film written and directed by R. Balki. The film features Amitabh Bachchan, Dhanush and Akshara Haasan, in her debut, in the lead roles. The film is jointly produced by Sunil Lulla, Balki, Rakesh Jhunjhunwala, R. K. Damani, Amitabh Bachchan, Abhishek Bachchan, Sunil Manchanda and Dhanush under their respective production banners. Ilayaraja composed the soundtrack album and background score, Cinematography was handled by P. C. Sreeram.

+1 us : https://plus.google.com/+ShrutiTv
Follow us : www.facebook.com/shrutitv
Twitte us : www.twitter.com/shrutitv
Web : www.shruti.tv
contact us : contact@shruti.tv

Share