ஸ்ட்ராபெரி – திரைவிமர்சனம்

ஸ்ட்ராபெரி – திரைவிமர்சனம்

சென்னையில் நடந்த ஒரு உன்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட ஒரு திகில் படம் தான் ஸ்ட்ராபெரி.

பள்ளி நிர்வாகத்தின் மெத்தன போக்கால், குடிபோதையில் பள்ளி வாகனத்தை ஓட்டிய ஓட்டுனரின் பொறுபற்ற செயலாலும், ஒரு விபத்து நடக்கிறது. அந்த வாகனத்திலிருந்து ஒரு சிறுமியை காப்பாற்ற நாயகன் முயன்றும் பலனில்லாமல் இறக்கிறாள் அந்த சிறுமி. குழந்தை இறந்த செய்தியை கேட்டு மனச்சிதைவுக்கு ஆளாகிறாள் தாய் தேவயானி, தன் குழந்தைக்கு நியாயம் கிடைக்க அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்கிறார் தந்தையாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, தந்தையிடம் பேரத்தில் தோற்று போன பள்ளியின் உரிமையாளர் வழக்கை வாபஸ் பெற மிரட்டுகிறான்.

இதற்கிடையில் ஆத்மாக்களிடம் பேசும் ஒருவன், இறந்த மனிதர்களின் ஆத்மாக்கள் சரியாக ஒரு வருட காலம் பூமியிலிருந்து, பின் வேறுலகம் செல்லும் என்றும், சிறுமியின் ஆத்மா சக்தி வாய்ந்தது என்றும், அது நாயகனின் துணை கொண்டு பள்ளி உரிமையாளரை கொல்ல முயற்சிக்கிறது என்றும் கண்டறிகிறான். அதை தான் இட்டபணியை செய்யும் ஒரு மீடியெட்டராய மாற்ற பள்ளி உரிமையாளனுடன் சேர்ந்து செயல்படுகிறான்.

சிறுமியின் ஆவி நாயகனுடன் சேர்ந்து குறிப்பிட்ட அந்த ஒரு வருடத்திற்குள் எப்படி தன்னையும் தன் பெற்றோரையும் காப்பாற்றுகிறது என்பது தான் இக்கதையின் முடிவு. ஒரு திகில் படம் மூலமா சமூக விழிப்புனர்வை சொல்ல முயற்சி செய்திருக்கும் இயக்குனர் பா.விஜய்யை பாராட்டலாம்.

கவிஞர் பா.விஜய் இந்த படத்தை தயாரித்து கதையின் நாயகனாவும் நடித்திருக்கார்.  பின்ணணி இசையில் தாஜ்நூர் கலக்கியிருக்கார். ஒளிப்பதிவு படத்திற்கு உறுதுனையாக இருக்கிறது. பாடல்களின் வரிகள் நன்றாக இருக்கிறது. வசனங்களிள் குறிப்பாக சமுத்திரகனி பேசும் வசனங்கள் சமுகத்திற்கு வேண்டிய ஒரு கருத்தாகயிருக்கிறது, மேலும் பேயோட பேய் படம் பார்க்க வந்த முதல் ஆல் நாநாகதான் இருப்பேன், மற்றும் பள்ளிகளை நடத்த வேண்டிய அரசாங்கம் மதுகடையையும், மதுகடையை நடத்துகிறது சில ரவுடிகள் பள்ளியையும் நடத்தறதும், என்ற வசனங்கள் சிறப்பா இருக்கு. சிறுமியின் தாயாக தேவயானி நல்லா நடிச்சிருக்காங்க, சிறுமிய நடிச்ச யுவினா பார்த்தவி தன் வேடத்தை சிறப்பாக செய்திருக்காங்க, படத்தில் ஒரு காட்சியில் பட்டாம்பூச்சியை பார்த்து, பட்டாம்பூச்சிக்கு மட்டும் தான் அடுத்தடுத்த பிறவி இருக்கிறது என்ற வசனம் பேசப்படுகிறது, அக்காட்சியில் வரும் பட்டாம்பூச்சி ஸ்ட்ராபெரி நிறத்தில் இருக்கிறது, இது தவிர ஸ்ட்ராபெரி என்ற தலைப்புக்கும் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, ரோபோ சங்கர் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்காரு. இப்படத்தில் பேய் இக்கதையில் நடிக்கும் கதாபாத்திரங்களை பயமுறுத்துவதற்கு பதிலாக பார்க்கும் நம்மை அதிகமாக பயமுறுத்துகிறது. மக்களுக்கு திகில் படம் பார்க்கும் ரசனை வேறு விதமா மாறியிருப்பதை நாம் இப்ப படத்தின் வெற்றியின் மூலம் உனரலாம்.

Share