தனி ஒருவன் – சினிமா விமர்சனம்

தனி ஒருவன் – சினிமா விமர்சனம்

உன் எதிரி யாரென்ரு சொல், நீ யார் என்று சொல்கிறேன். என்ற தாரகத்தை கொண்டவன் நாயகன். ஐ.பி.எஸ் பயிற்ச்சியிலேயே இரவு நேரத்தில் ரகசியமாக தன் சக தோழர்கள் நால்வருடன் சேர்ந்து குற்றங்கள் சிலவற்றை கண்டறிந்து தீர்த்து வைக்கிறான். எல்லா சிறிய குற்றங்களுக்குப் பின்பும் ஒரு பெரிய குற்றம் நிகழ்கிறது என்பதை கண்டுபிடித்து, அக்குற்றங்களின் பின்னணியில் முதல் மூன்று குற்றவாளிகளை கண்டுபிடிகிறான்.

தான் IPS பதவியேற்றவுடன் முதல் வேலைளையாக இம்மூவரையும் வேட்டையாட சூலுரைக்கிறான், ஆனால் இம்மூவருக்கும் முதலானவன் சித்தார்த் (அரவிந்த்சாமி) இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறான், IPS பதவியேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த வில்லன் கையாலேயே பதக்கத்தையும் பெருகிறான் நாயகன்.

கென்சர் நோய்க்கு மருந்தை மிக குறைந்த விலைக்கு இறக்குமதி செய்ய ஒரு வெளிநாட்டு கம்பெனி முடிவெடுக்கிறது, இதனால் பாதிப்படையும் வில்லன், அதற்காக இந்தியா வந்து அக்கம்பெனி முதலாளியை எப்படி வில்லன் தடுக்கிறான், இதை நாயகன் எப்படி முறியடிக்கிறானா? இல்லையா?. இதற்கு முடிவு தெரியும் போது INTERVAL…….

அதிகார பலமும், பணபலமும் கொண்ட வில்வன், தன்னை குறிவைத்த நாயகனை அவனுக்கே தெரியாமல் அவனை எப்படி விரட்டுகிறான், இறுதியில் நாயகன் எப்படி வில்லனை வெல்கிறான் என்பது மீதி கதை.

படத்தை துவக்கத்திலிருந்தே விருவிருப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ராஜா. ரிமேக் படங்களே இயக்கிய ராஜாவுக்கு இருந்த அந்த கெட்ட பெயர் இந்த படம் மூலம் மாறும். அட்டகாசமாக இயக்கியுள்ளார் ராஜா. ராம்ஜியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. திரைக்கதைக்கு, படத்தொகுப்பு ரொம்ப பக்கபலமா இருக்கு எடிட்டர் கோபி கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள், இசையில் குறிப்பாக பின்னனி இசை பிரமாதம், அதிலும் குறிப்பாக வில்லன் வரும் காட்சியை குறிப்பிட்டு சொல்லலாம், பிரமாதம். ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக சிறப்பா நடித்திருக்கிறார், வில்லனா அரவிந்த்சாமி சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார் படத்தில் உண்மையான நாயகன் அரவிந்த்சாமி தான் என்றால் அது மிகையாகாது, நயன்தாரா ஒரு பாடலுக்கு வருகிறார் ரவியை உருகி உருகி காதலிக்கிறார் அவ்வளவுதான் அவரது கதாபாத்திரம் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. தம்பிராமையா வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது.

தனி ஒவ்வொருவரும் மனது வைத்தால் மட்டுமே மாற்றம் என்பதை நிகழ்த்த முடியும் என்பது தான் இப்படத்தின் சாரம்சம்.

தனி ஒருவன் – தவறாமல் பாருங்கள், உங்களை ரசிக்க வைப்பான்.

Share