நடிகை தாமிரபரணி பானுவுக்கு டும். டும்.. டும்…

நடிகை தாமிரபரணி பானுவுக்கு டும். டும்.. டும்…

மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்ற பானு தமிழில் ‘தாமிரபரணி’ படத்தில் அறிமுகமாகி ‘அழகர்மலை’, ‘சட்டப்படி குற்றம்’, ‘பொன்னர் சங்கர்’, ‘புதுமுகங்கள் தேவை, ‘மூன்று பேர் மூன்று காதல்’, ‘தேசிங்கு ராஜா’, ‘வாய்மை’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

Bhanu-mrg1

முக்தா எல்சா ஜார்ஜ் என்பது பானுவின் இயற் பெயர். தமிழில் வரும் வெள்ளியன்று வரவிருக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ மற்றும் பாபி சிம்ஹா நடிக்கும் ‘பாம்பு சட்டை’ ஆகிய படங்களில் ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை பானு இன்று தனது திருமண செய்தியை அறிவித்திருக்கிறார். ரிங்கு டோமி என்பவரை மணம்முடிக்க இருக்கிறார். இது பெற்றோர்களே நிச்சயித்த திருமணமாகும். ஆகஸ்ட் 30-ம் தேதி கேரளாவில் இவருடைய திருமணம் நடைபெறவிருக்கிறது.

Share