தமிழரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் செயல் தலைவரானார்

தமிழரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் செயல் தலைவரானார்

சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்தார், கான்பூர் IIT யில் பொறியியல் பட்டமும், ஸ்டான் ஃபோர்ட் பல்கலைகழகத்தில் MS பட்டம்பெற்றார்.

2004 ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த பிச்சையின் தலைமையிலான குழுவே நாம் இன்று அதிகம் உபயோகிக்கும் குரோம் ப்ரவுசரை தயாரித்தது. குகூள் டிரைவ் மற்றும் குகூள் இயங்குதளத்தையும் பிச்சை தான் அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து 2013ல் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

குகூள் தவைராக இருந்த லாரிபேஜ் ஆல்பபெட் என்ற நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் வகித்து வந்த குகூள் நிறுவனத்தின் செயல் தலைவர் பதவி சுந்தர் பிச்சை வசம் வந்துள்ளது, இன்று முதல் குகூள் நிறுவனத்தின் தலைவராக சுந்தர் பிச்சை இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆல்பபெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களாகவே குகூள் இனி செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share