கமல் ஹாசனின் அதிரடி வேகம், முடிந்தது “தூங்காவனம்” படப்பிடிப்பு, விரைவில் திரையில்…

கமல் ஹாசனின் அதிரடி வேகம், முடிந்தது “தூங்காவனம்” படப்பிடிப்பு, விரைவில் திரையில்…

கமல் ஹாசன் ரசிகர்களுக்கு இந்த வருடம் சந்தோஷமான வருடமாக அமைந்துள்ளது. உத்தமவில்லன், பாப்பநாசம் வெற்றியை தொடர்ந்து இதோ அவரின் அடுத்தப்படம் “தூங்காவனம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பல வெற்றி படங்களை தயாரித்த ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ராஜேஷ் M செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், திரிஷா ஆகியோர் நடிப்பில் தமிழில் “தூங்காவனம்” என்றும், தெலுங்கில் “சீகட்டி ராஜ்யம்” என்றும் ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில்லும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்றது.

இப்படத்திற்காக ஜிப்ரான் இசையில், வைரமுத்து எழுதி, கமல்ஹாசன் பாடிய பாடலின் உருவாக்கத்துடன் படப்பிடிப்பு இனிதே முடிவடைந்தது. படத்துக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது, மிகவிரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகயிருக்கிறது.

 

Share