அப்துல் கலாம் புகைப்படம் திறந்து அஞ்சலி செலுத்திய ‘பாயும் புலி’ குழுவினர்
சென்னை சத்யம் திரையரங்கில் இன்று (2-8-2015) காலை விஷால் நடித்த ‘பாயும் புலி’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் யாரும் எதிர்பாரா வண்ணம் மறைந்த குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிரமாண்ட புகைப்படத்தினை பாரி வேந்தர் அவர்கள் திறந்து வைக்க அனைவரும் 1 நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பாயும் புலி படத்தின் ஆடியோ சிடியை பாரி வேந்தர் வெளியீட கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவா பெற்றுக்கொண்டார். இயக்குனர் சுசீந்திரனுக்கு சிறந்த தயாரிப்பாளர்களுக்கான இயக்குனர் என்கின்ற விருது கொடுக்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, இயக்குனர் சுசீந்திரனின் வெற்றி ரகசியத்தை அறிவிக்கிறேன், அது என்வென்றால் படம் எடுத்து முடித்த பின்பு முழு படமாக பார்க்கும் போது படம் எங்கு தோய்வடைகின்றதோ அங்கு திடிர் திருப்பமாக அதிரடி கதாப்பாத்திரம் ஒன்று உள்ளே வரும் அந்த கதாப்பாத்திரம் முழு படத்தையும் தாங்கி செல்லும் என்று ராமயாணம், மகாபாரம் உள்ளிட இலக்கியங்களில் இந்த உத்தி கையாளபட்டிருப்பதாக தெரிவித்தார். மெலோடி என்றாலே இன்று D.இமான் தான் நினைவுக்கு வருகிறார், 3000 பாடல்களை நான் எழுதியுள்ளேன், அதில் பெரும்பாலும் மெட்டுக்கு பாட்டு எழுதி தான் வழக்கம், ஆனால் இமான் என்னிடம் பாடல் வரிகளை வாங்கி சென்று அதற்கு இசை அமைத்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள், இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் படங்கள் யாவும் நன்றாக உள்ளது, உச்ச நட்சத்திரங்கள் அஜீத், விஜய், சூர்யா ஆகியோர் சுசீந்திரனுடன் பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.
இறுதியாக பேசிய விஷால், விளம்பரத்துக்காக நல்ல காரியங்கள் எதுவும் நான் செய்யவில்லை, ஆத்மார்தமாக செய்யும் இச்செயல்களை அரசியல் ஆக்காதீர்கள். நானும் கஷ்டப்பட்ட குடும்பத்திலுருந்து தான் வந்திருக்கின்றேன் ஆகவே ஐயா அப்துல் கலாம் வழிகாட்டின் படி என் வாழ்நாளில் என்னால் முடிந்தவரை ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வேன், என்றார்.
இவ்விழாவில் பாரிவேந்தர், வேந்தர் மூவிஸ் மதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், காஜல் அகர்வால், D.இமான், பரோட்டா சூரி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் காணொளி:
Social