திருநெல்வேலியில் தயாரான திருட்டு வீடியோ

திருநெல்வேலியில் தயாரான திருட்டு வீடியோ

அருள்நிதி நடித்து கடந்த 24-ம் தேதி வெளியான ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படத்தின் திருட்டு டிவிடிக்கள் தற்பொழுது மார்கெட்டில் சர்வசாதரனாமக கிடைக்கிறது. இதனை அறிந்த தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் அதிர்ச்சியாகி வெளிநாடுகளுக்கு நாம் தன் படம் அனுப்பவில்லையே.. பின்பு எப்படி திருட்டு டிவிடி என்று யோசித்து அந்த டிவிடியை வாங்கி பரிசோதித்ததில் அந்த ப்ரீண்ட் திருநெல்வேலி அருணகிரி தியேட்டரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதுவும் படம் வெளியான அன்று காலை 11:30 மணி காட்சியிலேயே படம் பிடித்துள்ளனர் திருட்டுவீடியோ ஒளிப்பதிவாளர்கள். சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் இது பற்றி புகார் கூறவிருப்பதாக தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை :

“தயாரிப்பாளர்களே!! ஒன்றுபடுங்கள்….

நான் J.S.K. சதீஸ்குமார். என்னுடைய J.S.K. பிலிம்ஸ் சார்பாக “நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்” என்னும் திரைப்படத்தை July 24-ம் தேதி தமிழகமெங்கும் வெளியிட்டேன் படம் வெளிவந்த அன்றே காலை 11:30 மணி காட்சியில் இந்தப் படத்தை திருநெல்வேலி அருணகிரி தியேட்டரில் திருட்டு VCD-யில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இதை நான் QUBE நிறுவனத்தின் மூலமாக கண்டுபிடித்து அவர்களிடம் கடிதமும் வாங்கியுள்ளேன்.

வெளிநாட்டு உரிமம் வழங்காத நிலையில் இது எவ்வளவு பெரிய மோசடி..? தயாரிப்பாளர்கள் நாம் சாகின்றோம்.. இப்படி அற்ப காசுக்காக செயல்படும் இது போன்ற நபர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும்.

எனவே சக தயாரிப்பாளர்கள் நாளை காலை 10:30 மணிக்கு சங்கத்திற்கு வாருங்கள். சங்க நிர்வாகிகளிடமும் கூறி உள்ளேன். அனைவரும் இனைந்து சினிமாவை காப்பாற்ற கமிஷனர் அலுவலகம் சென்று புகார் கடிதம் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

தயாரிப்பாளர்களே..! இதுதான் நல்ல தருணம் வாருங்கள்.. நமது உயிரை மீட்க.. இல்லையேல் நம்மை அழித்து விடுவார்கள். இது எனது சுயநலத்திற்கான அழைப்பல்ல.. நமக்கான அழைப்பு..!

JSK சதீஸ்குமார். JSK Film Corporation

Share