இது என்ன மாயம் திரைப்படம் கொரியன் படத்தின் தழுவலா ?!
விக்ரம் பிரபு நடிப்பில் வருகின்ற 31ம்தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘இது என்ன மாயம்’, 2010 ம் ஆண்டு வெளியான தென் கொரிய படமான Cyrano Agency ன் தழுவல் என்று பேசிக்கொள்கிறார்கள்.
நேற்று வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் டிரைலரில் வெளியான காட்சிகளின் படி இப்படம் கண்டிப்பாக Cyrano Agencyன் மூலக்கதையை உருவி மானே தேனே போட்டு, டிங்கர், பட்டி பார்த்து தமிழாக்கம் செய்யப்பட்டதாக அறியலாம்.
Cyrano Agency திரைப்படத்தில் ஹீரோவுக்கு வேலை இருக்காது தனது மச்சானுடன் இணைந்து காதலர்களை இணைத்து வைக்கும் ஒரு நிறுவனத்தை தொடங்குவார். காதலர்களை இணைக்க அவர்கள் குழு செய்யும் செயல்களில் கண்டிப்பாக காதல் உருவாகும், இவர்களின் புகழை அறிந்த ஒருவர் தான் விரும்பும் பெண்னை தன்னுடன் சேர்த்து வைக்க கோருவார். ஹீரோவும் கடன் தொல்லை காரணமாக அந்த வேலையை எடுக்க அங்க தான் டிவிஸ்டே, அந்த பெண் தான் விரும்பி காதலித்து தற்பொழுது பிரேக்கப்பில் இருக்கும் பெண்ணாகும். ஹீரோ தான் வாங்கிய காசுக்கு வேலையை செய்தாரா அல்லது காதலியுடன் இணைந்தாரா என்பதை காமெடி கலந்து எடுத்திருப்பார்கள்.
படம் கிடைத்தால் பாருங்கள். மறுபடியும் ‘இது என்ன மாயம்’ இரண்டாம் டிரைலரை மட்டும் பாருங்கள் எப்படி உருமாற்றம் அடைந்துள்ளதாக தெரியும். 31ம் தேதி வரட்டும் உண்மை உலகுக்கு தெரியும்.
அதே கதையை வைத்து 18 பகுதிகள் கொண்ட தொலைக்காட்சி தொடர் தயாரிக்கும் அளவுக்கு Cyrano Agency வெற்றி அடைத்து என்றால் அதன் வெற்றி எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று யுகித்துக்கொள்ளுங்கள்..



![இங்கிலாந்து நாட்டு ஆங்கில மொழி முழு நீள திரைப்படம் இன்ஃபிளுன்செர். [ INFLUENCER ]](http://www.shruti.tv/wp-content/uploads/2025/08/mov_infu-220x180.jpg)









Social