பாட்ஷா, கில்லி படங்களை வைத்து கோடி கோடியாக சம்பாரிக்கும் டிவி சேனல் – நக்கீரன் கோபால் குற்றச்சாட்டு

பாட்ஷா, கில்லி படங்களை வைத்து கோடி கோடியாக சம்பாரிக்கும் டிவி சேனல் – நக்கீரன் கோபால் குற்றச்சாட்டு

ஜேபிஆர் பிலிம்ஸ் கோவை வழங்கும் ‘கிருமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இசைத்தட்டை வெளியிட்டு நக்கீரன் கோபால் பேசும் போது

‘இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஜெயராமன் எனக்கு நெருங்கிய நண்பர். நான் அண்ணன் ரஜினியைப் பார்க்கும் போதெல்லாம் அவரையும் பார்ப்பேன். ஒரு இடத்தில் இருக்க மாட்டார். ஓடிக் கொண்டே இருப்பார். ஜெயராமன் அவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குபவர். மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ சமூகநோக்குள்ள படம் அதில் இப்படி ஒரு சமூகத்தோடுதான் வாழ்ந்து வருகிறோம் என்று அழகாகச் சொல்லியிருப்பார்.அந்த மணிகண்டனின் கதை என்பதால் இந்தக் ‘கிருமி’யும் சமூகம் சார்ந்த சிந்தனையோடுதான் இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

இன்று படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? ஆனால் டிவிக்காரர்கள் படத்தை வைத்து சம்பாதிக்கிறார்கள். ‘பாட்ஷா’ படத்தை தயாரித்த அண்ணன் ஆர்.எம்.வீ இப்போது வீட்டில்தான் இருக்கிறார். ஆனால் டிவியில் ஒருநாள் போடுகிற போதெல்லாம் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து விடுகிறார்கள். ‘கில்லி’ படத்தை தயாரித்த அண்ணன் ஏ.எம். ரத்னம் வீட்டில்தான் சாதாரணமாக இருக்கிறார். ஆனால் டிவியில் ஒருநாள் போட்டு ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து விடுகிறார்கள். இந்தப் படத்தை தயாரிக்கும் ஜெயராமன் நேர்மையாக சம்பளத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறினார்கள். நேர்மையாக உள்ளவர்கள் வெற்றிபெற வேண்டும். தயாரிப்பாளர் ஜெயராமன் வெற்றிபெற நக்கீரன் என்றும் துணைநிற்கும் என்று கூறி படக்குழுவினரை வாழ்த்துகிறேன்.” என்றார்.

Share