Gandhi image on beer cans US company apologizes

இந்தியர்களின் எதிர்ப்பை அடுத்து பீர் டின்களில் பொறிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் படத்தை நீக்க உள்ளதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனமான ‘நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி’ சமீபத்தில் ‘காந்தி பாட்’ என்ற பெயரில் டின் பீர் ஒன்றை அறிமுகம் செய்தது. மேலும், அந்த பீர் டின்களில் மகாத்மா காந்தி படமும் அச்சிடப்பட்டிருந்தது. இதற்கு இந்தியாவில் பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஆந்திர மாநிலம் நம்பள்ளி நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஜனார்த்தன் கவுடா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி மகாத்மா காந்தியின் படங்களை பீர் டின் மற்றும் பாட்டில்களில் உபயோகித்ததற்காக மன்னிப்பு கேட்டது.

Share