இன்று நேற்று நாளை – திரைவிமர்சனம்

இன்று நேற்று நாளை – திரைவிமர்சனம்

கதை feb 14 2065 இல் துவங்குகிறது. ஆர்யா கண்டுபிடித்த time machine ஐ செக் பண்ண அவரோட நாய feb 14 2015 க்கு அனுப்புறார். அந்த நாய் திரும்பி வரவில்லை. மெஷின் 2015க்கு வருகிறது.

விஷ்ணுவுக்கு வேலை இல்லை. கருணா ஜோசியக்காரன். விஷ்ணு மியா காதல் பிரச்சனையில் சரக்கடித்துவிட்டு செல்லும் போது scientist பார்த்தாவுடன் ஒரு விபத்தில் விஷ்ணுவுக்கும் கருணாவுக்கும் time machine கிடைக்கிறது. பார்த்தா தெளிவாக time machine பற்றி இருவருக்கும் சொல்கிறான். அன்று இரவே scientist பார்த்தா ஷாக் அடித்து கோமாவில் கிடக்கிறான்.

கருணாகரன் ஜோசியக்காரன் என்பதால் இதை வைத்து இருவரும் பணம் சம்பாதிக்கிறார்கள்… அதாவது தொலைந்து போன பொருட்களை முந்தைய நாளுக்கு சென்று அந்த பொருள் எங்கிருக்கு என்று தெரிந்து கொண்டு வந்து நிகழ்காலத்தில் சொல்வது…

மியாவின் அப்பா JPஐ வில்லன் பணம் கேட்டு மிரட்ட JP போலிஸிடம் சொல்லி என்கவுண்டர் செய்து விடுகின்றனர்.

2 மாதங்களுக்கு பிறகு ஒரு வேலைக்காக, மீண்டும் வில்லன் இறந்த அதே நாளுக்கு செல்கின்றனர். கருணா தெரியாமல் வில்லனின் நாயை விடுவிக்க அது போலீஸ்காரனை கொன்றுவிட வில்லன் தப்பித்து விடுகிறான். இப்போது நிகழ்காலத்தில் வில்லன் உயிரோடு இருக்கிறான். JPஐ பழி வாங்க முயல்கிறான்.

இது தெரிந்துகொண்ட இருவரும் மீண்டும் அதே நாளுக்கு சென்று மாற்ற முயலும் போது time machine மீது குண்டு பட்டுவிடுகிறது. தப்பித்து நிகழ்காலத்தில் வந்தவுடன் ரிப்பேர் ஆகி விடுகிறது. இதற்கிடையில் ஒரு சண்டையில் வில்லனிடம் இருந்து தப்பிக்கும்போது வில்லனால் குண்டடிபட்டு மியா இறந்து போகிறாள்…

Time machine ஓரளவு சரிசெய்த scientist பார்த்தா இனிமேல் நினைத்த நேரத்திற்கு போக முடியாது. ஆனால் வில்லன் இறந்த அதே காலத்துக்கு மட்டும் தான் போக முடியும் ஆனால் திரும்பி வர முடியாதுன்னு சொல்லிவிடுகிறான்…

மியா உயிரை காப்பாற்ற வேறு விஷ்ணுவும் கருணாவும் என்ன செய்கின்றார்கள் என்பதை திரையில் காண்க..

IndruNetruNaalai-01

இந்தவாரம், விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று நேற்று நாளை, ஆதியின் நடிப்பில் யாகாவாராயினும் நா காக்க, விமல் நடிப்பில் காவல், கருணாஸ் நடிப்பில் லொடுக்கு பாண்டி, எஸ்.பி.சரண் தயாரிப்பில், மூணே மூணு வார்த்தை உள்ளிட்ட ஐந்து படங்கள் வௌியாகியுள்ளது. இந்த ஐந்து படங்களில் விஷ்ணு விஷால் நடிப்பில் வௌியாகியிருக்கும்  இன்று நேற்று நாளை படத்திற்கு தான் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

காதல் படங்களையும், பேய் படங்களையும், காமெடி மற்றும் ஆக்ஷ்ன் படங்களை மட்டுமே பார்த்து வந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப்படம் ஒரு வித புதிய அனுபவத்தை தந்துள்ளது. இதனால் தானோ இன்று நேற்று நாளை படத்தை ரசிகர்கள் ஏற்று கொண்டுள்ளனர்.

வித்தியாசமான படங்களை பார்த்து பார்த்து தயாரித்து வரும் சிவி குமாருக்கு நிச்சயம் இந்த இன்று நேற்று நாளை படம் ஒரு கமர்ஷியல் ஹிட் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

பொதுமக்களின் பார்வையில் இன்று நேற்று நாளை shrtuti.tv யின் வீடியோவை காணுங்கள்:

Share