Ashok, Nazar,  Jaya Sudha starring ‘KAA KAA KAA’ movie shooting start today

Ashok, Nazar, Jaya Sudha starring ‘KAA KAA KAA’ movie shooting start today

அசோக் கதாநாயகனாக நடிக்கும் “கா..கா..கா” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லாக உருவாகும் இப்படத்தில் “காக்கா” முக்கிய கேரக்டராக வருகிறது, அதனாலேயே இப்படத்திற்கு “கா..கா..கா” என காக்கா எழுப்பும் சத்தம் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் மனோன்.M தெரிவித்தார், இப்படத்தில் மேகாஸ்ரீ (அறிமுகம்), ஸ்ருதி ராம்கிருஷ்ணன் இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர், காமெடியனாக யோகி பாபு நடிக்கிறார், இவர்களுடன் நாசர் மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயசுதா தமிழில் நடிக்கிறார், குழந்தை நட்சத்திரம் யுவினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் துவங்கி பாண்டிச்சேரி மற்றும் விசாகப்பட்டிணத்தில் நடைபெறுகிறது. அர்பிதா கிரியேஷன்ஸ் சார்பில் பதிகொண்டா கிரன் இப்படத்தை தயாரிக்கிறார். கதை & நிர்வாக தயாரிப்பு – ரொனால்ட் ராஜ் S. வில்லியம்ஸ், ஒளிப்பதிவு – சரவண நடராஜன், இசை – அம்ரித், எடிட்டிங் – சஷி குமர், மக்கள் தொடர்பு – சரவணன்.

Share