Cable Shankars’s Thottal Thodarum Release this 23 Jan

ஜனவரி 23 முதல் வெள்ளித்திரையில் “தொட்டால் தொடரும்” 

thottal-thodarum-00

வலைப்பூ உலகில் முடிசூடா மன்னாக வலம் வரும் கேபிள் சங்கர் அவர்களின் இயக்கத்தில் வருகின்ற 23ம் தேதி உலகமெங்கும் வெளிவர இருக்கும் திரைப்படம் “தொட்டால் தொடரும்”. கேபிள் சங்கர் தனது வாழ்கையை கேபிள் டிவி, சினிமா வினியோகம் என ஆரம்பித்தார், சிறிது காலம் சென்னை ஜாபர்கான் பேட்டை விஜயா தியேட்டரையும் லீசுக்கு எடுத்து நடத்தினார். அதனால் தான் தன் பெயருடன் கேபிள் இணைத்துகொண்டார். வலைப்பூ உலகம் பிரபலமாக தொடங்கியவுடன் இவரும் எழுத ஆரம்பித்தார். தனது இயல்பான எழுத்து மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக தொடங்கினார். திரைப்படங்களுக்கு இவர் எழுதும் விமர்சனங்களை பார்த்த பின்பு தான் டிக்கெட் புக்செய்யும் இளைஞர் கூட்டம் உண்டு. திரைப்படங்களை நேர்மையாக விமர்சனம் செய்யும் இவரது பாணி திரைத்துறையினருக்கும் பிடிக்கும். சினிமா வியாபாரம், சாப்பாட்டு கடை, தெர்மக்கோல் தேவதைகள் என கேபிள் சங்கரின் எழுத்தில் புத்தகங்கள் வெளிவந்து ஹிட்டடித்திருக்கின்றது.

வெளியில் இருந்து சுலபமாக விமர்சனம் செய்துவிடலாம் உள்ள இறங்கி வேலைபார்த்தா தான் தெரியும் கஷ்டம் என புலம்புவர் சினிமாவில் உள்ளவார்கள், அவர்களது கஷ்டம் அப்படி. இதோ ஒரு நல்ல படைப்பாளி தான் நல்ல விமர்சகனாக இருக்க இயலும் என நிருபிப்பதற்க்காக களம் இறங்கியிருக்கார் கேபிள் சங்கர். கோடம்பாக்கமே ஆவலுடன் காத்திருக்கும் கேபிள் சங்கரின் ‘தொட்டால் தொடரும்’ வெற்றி பெற வாழ்த்துகிறோம்…!


நடிப்பு: தமன் குமார், அருந்ததி
எழுத்து – இயக்கம் : கேபிள் சங்கர்
தயாரிப்பு : துவார் G.சந்திரசேகர்
ஒளிப்பதிவு : விஜய் ஆம்ஸ்ட்ராங்

 

Share