ஈழத்தமிழர்கள் நடித்த “தீபன்” எனும் பிரெஞ்சுப் படத்துக்கு கான்ஸ் விருது

ஈழத்தமிழர்கள் நடித்த “தீபன்” எனும் பிரெஞ்சுப் படத்துக்கு கான்ஸ் விருது

dheepan1dheepan2

எழுத்தாளர் ஷோபா சக்தி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகிய ஈழத்தமிழர்கள் நடித்த “தீபன்” எனும் பிரெஞ்சுப் படம் கான்ஸ் விருது பெற்றது.

இதன் இயக்குனர் 63 வயதான ழாக் ஆதியார்த்( JACQUES AUDIARD) தனது 7வது படமான இத்திரைப்படத்தில் ஈழப் போரில் ஈடுபட்ட முன்னாள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் பிரான்சில் பொய்யான குடும்பத்துடன் எப்படி வந்து குடியேறுகிறார், அவரது பிரச்சினைகள் என்ன என்பது பற்றி பேசுகிறார். சொகுசு ஓட்டல்களில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருக்கும்போது ரோஜாப் பூக்களைக் கொண்டு வந்து நம்மிடம் விற்பவர்களின் வாழ்க்கை எப்படி கடினமாக இருக்கிறது என்பதை இந்த சினிமா காட்டுகிறது.

விருது பெற்றவர்களுக்கு ஸ்ருதி.டிவி இணையதளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

Share