சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் ரஞ்சித்

ranjith

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குகிறார் பட்ஜெட் 300 கோடி, இல்லை இல்லை முருகதாஸ் இயக்குகிறார் பட்ஜெட் 200 கோடி என ரெக்கைகட்டி பறந்தது. இதோ அதிர்ச்சியான செய்தி தான் ஆனால் உறுதிபடுத்தப்பட்ட செய்தி மகிழ்ச்சியான செய்தி, அட்டகத்தி, மெட்ராஸ் திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்குகிறார். இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய ரஞ்சித்துக்கு எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது என்பது தான் கோடம்பாக்கத்தின் டன் கணக்கான கேள்வி.! தனது நேர்த்தியான இயக்கம், மக்களின் வாழ்க்கை பதிவினை இயல்பான படமாக்கம் என கலக்கிய ரஞ்சித்துக்கு சூப்பர் ஸ்டார் தனது அடுத்தப்படத்தினை தந்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சிரியமில்லை. இத்திரைப்படம் 2016 பொங்கல் விருந்தாக அமைய இருக்கிறது. Get ready folks.

Share