India Pakistan Movie from May 8

India Pakistan Movie from May 8

சிறந்த திரைக்கதை உடைய நான், சலீம் படங்களை தேர்ந்தெடுத்து நடித்த விஜய் ஆண்டனி இந்த முறை காதலை மையப்படுத்தி அதிரடியாக இந்தியா பாகிஸ்தான் மூலம் களமிறங்குகிறார்.  இந்தியா பாகிஸ்தான் போன்று மோதலில் ஆரம்பிக்கும் காதல் இரு உள்ளங்களுக்குள் இருக்கும் காதலால் இணையும் படமாக இருக்கும் எங்கிறார் விஜய் ஆண்டனி. படம் முழுவதும் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது என்று நினைக்கிறோம் ஏனெனில் விஜய்க்கு துணையாக ஜெகன், எம்.எஸ்.பாஸ்கர், பசுபதி, மனோபாலா, நாதஸ்வரம் முனீஷ்ராஜா என ஒரு நகைச்சுவை பட்டாளமே களம் இறங்கியிருக்கிறது. இந்த படத்தில் 5 பாடல்களை திரையிட்டு காட்டினார்கள் அனைத்து பாடல்களும் நன்றாக இருந்தது அதிலும் முழுவதும் ஃகிராபிக்ஸ் யை துணைக்கு வைத்து கொண்டு அமர்களப்படுத்தியிருக்கிறார்கள். அனைவரின் எதிர்பார்ப்புகளையும் எகிற வைத்திருக்கும் இந்த படம் மே மாதம் 8ம் தேதி திரைக்கு வருகிறது.

இயக்கம் : N.ஆனந்
தயாரிப்பு : ஃபாத்திமா விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு : N.ஓம்
இசை : தீனா தேவராஜன்
எடிட்டிங் : M.தியாகராஜன்

குழுவினரின் பேட்டிகளின் காணொளி

Share